அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம்
திங்கள்கிழமை (மே 7) முதல் தொடங்குகிறது. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டது.அரசு கல்லூரிகள் பக்கம் மாணவர்களை ஈர்க்கும் வகையில், கடந்த ஆண்டு வரை தனியார் கல்லூரிகள் விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்குவதற்கு முன்பாகவே, அரசுக் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகத்தை தொடங்கிவிட்டன. நிகழ் கல்வியாண்டுக்கான (2018-19) விண்ணப்ப விநியோகத்தை தனியார் கலை-அறிவியல் கல்லூரிகள் புதன்கிழமை (மே 2) தொடங்கி விட்ட நிலையில், அன்றைய தினம்தான் அரசு கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக பெரும்பாலான அரசு கல்லூரிகள், வரும் திங்கள்கிழமை முதல் விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்க உள்ளன. பிள்ஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகி அடுத்த 10 வேலை நாள்கள் வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். அன்றைய தினமே பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளாகவும் நிர்ணயிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம்: இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையின்படி, அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 48, பதிவுக் கட்டணம் ரூ. 2 சேர்த்து, ஒவ்வொரு மாணவரிடமும் ரூ. 50 மட்டுமே வசூலிக்கவேண்டும். தாழ்த்தப்பட்ட (எஸ்.சி..), பழங்குடியின (எஸ்.டி.) மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
பதிவுக் கட்டணம் ரூ. 2 மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்தச் சலுகையைப் பெற மாணவர்கள் சாதிச் சான்றிதழ் நகலைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...