7வது கல்வி ஆண்டை நிறைவுசெய்யும் 12000க்கும் மேலான தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்களுக்கு
(தற்போது சம்பளம்ரூ.7700) பட்ஜெட் மானியக்கோரிக்கையில் புதிய அறிவிப்புகளை வெளியிடுமா தமிழக அரசு? அனைவரும் எதிர்பார்ப்பு !!!
மே மாதத்திற்கு ஊதியம் தரவேண்டி கல்விஅமைச்சர், பள்ளிக்கல்வி முதன்மை செயலர் மற்றும் அனைவருக்கும் கல்விஇயக்க மாநில திட்ட இயக்குநர் ஆகியோரை கடந்த ஏப்ரல் மற்றும் நடப்பு மே மாதத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பரிசீலித்து வருவதாக அமைச்சர் மற்றும் செயலர் அவர்களும் நம்பிக்கை அளித்து இருந்தனர். ஆனால் மே மாதத்திற்கு ஊதியம் தரவேண்டியது குறித்து உத்தரவுகள் வரவில்லை என அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் சொல்கிறார்கள். எனவே மே மாதம் ஊதியம் தருவது குறித்து செயல்முறை ஆணைகளை உடனடியாக வெளியிடவேண்டும். இந்த சந்திப்புகளின்போது தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை தலைவர் திரு.பா.ஆரோக்கியதாஸ்(TATPF) தலைமையிலும், தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.செந்தில்குமார் ஆகிய எனது முன்னிலையிலும் நமது மாநில தலைமை நிர்வாகிகள் காஞ்சிபுரம் திரு.ஆற்றலரசு, திரு.குமார், திருவண்ணாமலை திரு.சங்கர், திருவள்ளூர் திரு.ரமேஷ்குமார், திரு.அசோக்குமார், திரு.கோபி, திரு.மனோகரன், கடலூர் திருமதி.அபிராமிவிவேகானந்தன் உடனிருந்தனர்.
வருகின்ற ஜீன் மாதத்தில் பணிமாறுதல் நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே ஏற்கனவே 25.10.2017ல் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை தலைவர் திரு.பா.ஆரோக்கியதாஸ்(TATPF) அவர்கள் தலைமையிலும், எனது முன்னிலையிலும் கல்விஅமைச்சர் அவர்களை சந்தித்தபோது அவரவர்
இருப்பிட
பகுதிக்கு
அருகில்
அனைவருக்கும்
பணிமாறுதல்
தருவதாக
சொன்னபடி
விரைந்து
நடமுறைப்படுத்த
வேண்டும்.
மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 7வது ஊதியக்கமிஷன் 30% ஊதிய உயர்வுடன் சேர்த்து கணிசமான ஊதிய உயர்வு மற்றும் அனைத்து வேலைநாட்களிலும் முழுநேர வேலை குறித்த அரசாணைகளை வெளியிட்டு இந்த மானியக்கோரிக்கை கூட்டத்தொடரிலே
அரசு வெளியிட
அனைவரும்
வலியுறுத்தி
வருகின்றனர்
என்பதை
கூடுதல்
கவனம்
செலுத்தி
ஆவன
செய்திட
வேண்டும்.
ஊதிய முரண்பாடுகளை கலைய வலியுறுத்தும் ஒருநபர் குழுவிடம் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை தலைவர் திரு.பா.ஆரோக்கியதாஸ்(TATPF) அவர்களால் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு இந்த தருணத்திலாவது தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வுடன்கூடிய நிலையான வேலையை உறுதிசெய்து அறிவிப்புகளை வெளியிடவேண்டும்.
ஏற்கனவே ஜீன், ஜீலை 2017ல் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு கல்வி அமைச்சர் பணிநிரந்தரம் செய்ய அரசு பரிசீலித்து வருகிறது என்றும், பணிநிரந்தரம் செய்ய கமிட்டி அமைக்கப்டும் எனவும் பதிலளித்துள்ளதை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
தமிழக முதல்வரை சந்தித்தபோது
(2.11.2017) குறைந்தபட்சமாக சிறப்புகாலமுறை ஊதியத்தில் தொகுப்பூதிய
பகுதிநேர ஆசிரியர்களை பணியமர்த்த தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு
(TACTO) சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு மனிதநேயத்துடன் இந்த பட்ஜெட் மானியக்கோரிக்கை கூட்டத்தொடரிலாவது
புதிய அரசாணை வெளியிட்டு சிறப்பாசிரியர்களாக காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த அனைவரும்
ஒருமனதாக தமிழக அரசுக்கு மீண்டும் கோரிக்கை விடுக்கிறோம்.
இவன்,
செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் : 9487257203
Yethavathu senchingala????? Summa varathu....porathu.... Pothum intha sambalam.
ReplyDeleteAnonymous - ஹலோ நீங்களும் மனுசன் தானே கொஞ்சம் எங்க கஷ்டத்தையும் புரிஞ்சிக்கோங்க.
ReplyDelete