எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ‘தினத்தந்தி’ ரூ.34 லட்சம் கல்வி நிதி
மாவட்டத்தில் தலா 10 பேருக்கு வழங்கப்படுகிறது எஸ்.எஸ்.எல்.சி.
மாணவர்களுக்கு கல்வி நிதியாக, ‘தினத்தந்தி’ ரூ.34 லட்சம் வழங்குகிறது.
இந்த நிதி உதவி, ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 10 பேருக்கு வழங்கப்படுகிறது. ‘தினத்தந்தி’ கல்வி நிதி கல்வியில் சிறந்து விளங்குவதற்காக மாணவர்களை ‘தினத்தந்தி’ ஊக்குவித்து வருகிறது. பொருளாதார ரீதியில் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளை ஊக்குவித்து, அவர்கள் மேல்படிப்பை தொடர்வதற்கு வசதியாக ‘தினத்தந்தி கல்வி நிதி’ என்ற திட்டத்தை ‘தினத்தந்தி’ கடந்த 2016-ம் ஆண்டுதொடங்கியது. இந்த திட்டத்தின்கீழ், தமிழகத்தில் மாவட்டத்துக்கு 10 மாணவ-மாணவிகள் வீதம் 340 பேர் (புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்பட) தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.34 லட்சம் உதவித்தொகை 34 மாவட்டங்களுக்கும் மொத்த உதவித்தொகையாக ஆண்டுதோறும் ரூ.34 லட்சம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கல்வி நிதியை பெற, 2017-18-ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வில் 375 மற்றும் அதற்கு கூடுதலான பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துக்குள் இருக்கவேண்டும்.
விதிகள் மற்றும் நிபந்தனைகள் விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், வருமான சான்றிதழ், குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை அனுப்பி வைக்கவேண்டும்.இதற்கான விண்ணப்ப படிவம் இன்றைய ‘தினத்தந்தி’யின் 16-ம் பக்கம் பிரசுரிக்கப்பட்டு உள்ளது. அந்த விண்ணப்பபடிவத்தில் மட்டுமே மாணவர்கள் பூர்த்தி செய்து அனுப்பவேண்டும். ஜெராக்ஸ் நகல் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது. அது எந்த ஒரு நீதிமன்றத்தின் பரிசீலனைக்கும் உரியது அல்ல. ஜூன் 20-ந்தேதி கடைசி நாள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‘மேலாளர், தினத்தந்தி கல்வி நிதி, தினத்தந்தி, 86 ஈ.வி.கே.சம்பத் சாலை, சென்னை-7’, என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசி தேதி ஜூன் 20-ந்தேதி ஆகும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...