கோவை, அறிவிப்பு வெளியான ஏழு நாட்களில், வேளாண் படிப்புகளுக்கு, 29 ஆயிரத்து, 430 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், 14 உறுப்பு
கல்லுாரிகள் மற்றும், 26 இணைப்பு கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகள்
மூலம், 12 இளங்கலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.இந்த கல்வி ஆண்டுக்
கான, இளங்கலைமாணவர் சேர்க்கை அறிவிப்பு, வேளாண் பல்கலை சார்பில், மே
14ல்வெளியிடப்பட்டது. 'வேளாண் பல்கலையின் கீழ், வழங்கப்படும் அனைத்து
இளங்கலை பட்டப்படிப்புகளுக்கும்,ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்'
என, அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.மே 18 முதல் ஆன்லைன் விண்ணப்பம் துவங்கியது.
ஜூன், 17 வரை ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். அறிவிப்பு
வெளியான, ஏழு நாட்களில், 29 ஆயிரத்து 430 பேர் விண்ணப்பித்துள்ளனர்.இதில்,
15 ஆயிரத்து 895 பேர், முழுமையாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கட்டணம்
செலுத்தியுள்ளனர். இவர்களில், ஆண்கள், 6797 பேர்; பெண்கள், 9098 பேர்.கடந்த
ஆண்டு, 49 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன. இந்த ஆண்டு, 50
ஆயிரத்துக்கும்மேற்பட்ட விண்ணப்பங்கள் வர வாய்ப்புஇருப்பதாக, பல்கலை
தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...