பயணிகளின் நலனையொட்டி, 25 தொலைதூர ரெயில்களில் விரும்பிய உணவை வாங்கி, கார்டு மூலம் பணம் செலுத்தும் புதிய வசதியை ரெயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
புதுடெல்லி:
பயணிகளின் நலனையொட்டி, 25 தொலைதூர ரெயில்களில் ரெயில்வே புதிய வசதியை அறிமுகம் செய்து உள்ளது.
இதன்படி, அந்த ரெயில்களில் பயணம் செய்யும்போது, மெனு கார்டு பார்த்து பயணிகள் தாங்கள் விரும்பிய உணவினை, அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரிடம், நிர்ணயித்த விலையில் ஆர்டர் செய்து பெற்று சாப்பிடலாம்.
உணவுக்கான விலையை ரொக்க பணமாக தர வேண்டியது இல்லை. அதை விற்பனையாளர் கையில் வைத்து இருக்கிற பி.ஓ.எஸ். கருவியில் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் செலுத்தலாம்.
இந்த திட்டம் சோதனை ரீதியில் இப்போது அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும், எல்லா ரெயில்வே மண்டலங்களிலும் ஓடுகிற ரெயில்களிலும் படிப்படியாக கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது இந்த வசதியை பெற்று உள்ள ரெயில்களில் பெங்களூரு-டெல்லி கர்நாடக எக்ஸ்பிரஸ், ஜம்முதாவி-கொல்கத்தா சீல்தா எக்ஸ்பிரஸ், ஐதராபாத்-டெல்லி தெலுங்கானா எக்ஸ்பிரஸ், ஜெய்ப்பூர்-மும்பை ஆரவாலி எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவை அடங்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...