இதில், ஆந்திர மாணவர்கள், தேசிய அளவில், முதல் மற்றும்
இரண்டாம் இடம் பெற்றனர். தமிழக மாணவர், 21ம் இடம் பிடித்துள்ளார். பிளஸ் 2
முடிக்கும் மாணவர்கள், மத்திய அரசின், ஐ.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் சேர,
ஜே.இ.இ., என, அழைக்கப்படும், ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற
வேண்டும். இந்த தேர்வானது, பிரதான தேர்வு மற்றும் அட்வான்ஸ்டு என, இரு
கட்டங்களாக நடைபெறும். அதேநேரத்தில், என்.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., போன்ற, உயர்
கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., பிரதான தேர்வில் மட்டும் தேர்ச்சி
பெற்றால் போதுமானது. இந்த ஆண்டு, ஜே.இ.இ., பிரதான எழுத்து தேர்வு, ஏப்.,
8ல், 114 நகரங்களில் நடந்தது; 'ஆன்லைன்' தேர்வு, ஏப்., 15, 16ல், 258
நகரங்களில் நடந்தது. இதில், 3.20 லட்சம் மாணவியர் உள்பட, 11.35 லட்சம் பேர்
பங்கேற்றனர். பிரதான தேர்வு முடிவுகள், மத்திய இடைநிலை கல்வி வாரியமான,
சி.பி.எஸ்.இ., சார்பில், cbseresults.nic.in என்ற, இணையதளத்தில் நேற்று
வெளியிடப்பட்டன. இதில், மொத்தம், 360 மதிப்பெண்களுக்கு, ஆறு மாணவர்கள், 350
மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களில், ஆந்திராவை சேர்ந்த இரு மாணவர்கள்,
தேசிய அளவில், முதல் இரண்டு இடங்களை பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த, கிருஷ்ணன் ராமலிங்கம் என்ற மாணவர், 335 மதிப்பெண்
பெற்று, தேசிய அளவில், 21ம் இடம் பிடித்துள்ளார். தேர்வு எழுதியவர்களில்,
50 ஆயிரத்து, 693 மாணவியர் உள்பட, 2.31 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களில், ஐ.ஐ.டி.,யில் சேர விரும்பும் மாணவர்கள், அடுத்தகட்டமாக, வரும்,
20ல் நடக்கும், ஜே.இ.இ., 'அட்வான்ஸ்ட்' தேர்வை எழுத வேண்டும்.
அதேநேரத்தில், என்.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.ஐ.டி.,யில் சேர உள்ள மாணவர்கள்,
தற்போதைய மதிப்பெண்ணை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். ஜே.இ.இ., பிரதான
தேர்வில், பொது பிரிவு மாணவர்களுக்கு, 74 மதிப்பெண், 'கட் ஆப்' ஆக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிக பிற்படுத்தப்பட்டோர், 45; தலித் மாணவர்கள்,
29; பழங்குடியினர், 24 மதிப்பெண்கள் எடுத்தால், தகுதி பெறலாம் என,
அறிவிக்கப்பட்டுள்ளது
2nd Mid Term Exam 2024
Latest Updates
Home »
» ஜே.இ.இ., பிரதான தேர்வு, 'ரிசல்ட்' வெளியீடு : ஆந்திர மாணவர் முதலிடம்: தமிழகம், 21ம் இடம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...