Home »
» 'பிளஸ் 2 தேர்வு முடிவு தாமதமாக வாய்ப்பில்லை'
'பிளஸ் 2 பொருளாதார பாடத்துக்கு மறு தேர்வு நடத்தப்பட்டதால்,
தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்படாது' என, சி.பி.எஸ்.இ., எனப்படும்,
மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
மார்ச்சில் நடந்த, பிளஸ் 2 பொருளாதார பாடத் தேர்வுக்கான
வினாத்தாள், முன் கூட்டியே வெளியான விவகாரத்தில், ஹிமாச்சல பிரதேசம்
மற்றும் ஜார்க்கண்ட் மாநில பள்ளி ஆசிரியர் உட்பட மூவர் கைது
செய்யப்பட்டனர். இதையடுத்து, பொருளாதார பாடத்துக்கு மறு தேர்வு
நடத்தப்பட்டது.சி.பி.எஸ்.இ., நடத்தும் தேர்வுகளில், வினாத்தாள் வெளியாவதை
தடுக்கும் நடைமுறைகளை ஆய்வு செய்ய, மத்திய மனித வள மேம்பாட்டு துறை
முன்னாள் செயலர், வினய் ஷீல் ஓபராய் தலைமையில், ஏழு பேர் அடங்கிய கமிட்டி
நியமிக்கப்பட்டது. இந்த கமிட்டி, தன் அறிக்கையை, இந்த மாதம் இறுதிக்குள்
சமர்ப்பிக்கவுள்ளது.இந்நிலையில், பிளஸ் 2 பொருளாதார பாடத்துக்கு மறுதேர்வு
நடத்தப்பட்டதால், தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என,
தகவல்கள் கசிந்தன. ஆனால், 'தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும்.
தாமதம் ஏற்பட வாய்ப்பில்லை' என, சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் கூறியுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...