பள்ளியில் கட்டணம் செலுத்த தாமதித்ததால் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம்
சான்றிதழை வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஜீல் கல்வி அறக்கட்டளையின் சார்பில்
நடத்தப்படும் தியான்கங்கா பள்ளியில் பயின்று வந்த 150க்கும் மேற்பட்ட
மாணவர்களுக்கு, பள்ளி நிர்வாகம் இடமாற்றச் சான்றிதழை வழங்கியது.
பள்ளி நிர்வாகத்தின் இந்த கெடுபிடியை போக்கை கண்டித்து மாணவர்களின்
பெற்றோர், மாணவர்கள் என அனைவரும் போராட்டத்தில் குதித்தபோது, கட்டணம்
செலுத்தாததால் சான்றிதழ் வழங்கியதற்குக் காரணம் என பள்ளி நிர்வாகம்
தெரிவித்துள்ளது.
பள்ளிக் கட்டணமாக ரூ.30 ஆயிரமும், காப்பீட்டுத் தொகையாக ரூ10 ஆயிரமும்
வழங்கியும், கூடுதலாக பணம் கேட்டு பள்ளி நிர்வாகம் மோசடி செய்வதாக
பெற்றோர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஆனால், பள்ளி நிர்வாகமே கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் என மும்பை
ஹைகோர்ட் அளித்த தீர்ப்பின்படியே கட்டணம் கேட்கப்பட்டது. கடந்த ஆண்டு
கட்டணம் செலுத்தியவர்களுக்கு, இந்த வருடமும் என்ன பிரச்சனை வந்ததென்று
தெரியவில்லை என பள்ளி நிர்வாகம் அலட்சியமாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாங்கள் அனைத்துமே இலவசமாக கொடுக்கிறோம்.அதனால் தான், ஆசிரியர்கள் அனைவரும் வேதனைப்படுகிறார்களாம்.
ReplyDelete