கடந்த 10 நாட்களில் கோடை காலத்தில் இந்தியாவின் நிலை குறித்த புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இதில் பல இடங்களில் தீ எரிவது புள்ளிகளாக காட்சி அளிக்கின்றன.
இந்த தீ புள்ளிகள் கடும் கோடை வெயில், அதனால் கருங்கார்பன் துகள்கள், புவி வெப்பமயமாதல் அதிகரிப்பால் ஏற்படும் மாசுபாட்டை குறிப்பதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தீ புள்ளிகள் அதிக வெப்பத்தால் ஏற்படும் காட்டுத்தீயை குறிப்பதாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது.
நாசா வெளியிட்டுள்ள புகைப்படத்தின்படி, மத்திய இந்திய மாநிலங்களான உ.பி., ம.பி., மகாராஷ்டிரா, சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களிலேயே அதிக தீ புள்ளிகள் காணப்படுகின்றன. தென் மாநிலங்கள் சிலவற்றில் குறைந்த அளவு தீப்புள்ளிகள் காணப்படுகின்றன.
எச்சரிக்கை:
கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு, ஏற்படும் இந்த காட்டுத்தீயால் வெளியாகும் புகையால் காற்று மாசுபாடு அதிகரிக்கிறது. வேலைக்கு போதிய ஆட்கள் கிடைக்காததாலும், விளை பொருட்களுக்கு ஏற்ப விலை கிடைக்காததால் பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் விவசாயிகளே விளை நிலத்திற்கு தீ வைத்த சம்பவங்கள் அதிகம் நடந்ததாலும் இந்த தீ புள்ளிகள் அதிகமாக காணப்படுவதாலும் இப்படி நடக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...