பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம் சார்பில், கிம்போ என்கிற மெசேஜிங் ஆப் வெளியிடப்பட்டுள்ளது. இது வாட்ஸ் அப்பிற்கு போட்டியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, நெல்லையில்
ஆசிரியர் பணியிட நியமன ஆணைக்கு 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய
உதவி தொடக்க கல்வி அலுவலர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
'அரசு
பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவு, 'பயோமெட்ரிக்' முறைக்கு மாற்றப்படும்.
நுாலகங்களில், 'வைபை' வசதி ஏற்படுத்தப்படும்,'' என, பள்ளி கல்வித் துறை
அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்தார்.
அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவது குறித்து
முதல்வருடன் ஆலோசனை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு பயோ மெட்ரிக், அரசு பள்ளிகளில் LKG, UKG-
உட்பட இன்றைய சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய
அறிவிப்புகள்
சென்னை, சட்டசபையில் 30-ந்தேதி (இன்று) பள்ளி கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் கேள்விகள் வருமாறு:-
மருத்துவம்
சார்ந்த படிப்புகள் குறித்து மாணவர் களுக்கு விழிப்புணர்வு தேவை என்று
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்
எஸ்.கீதாலட்சுமி கூறினார்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் பல கொடுத்து கவர்ந்து வரும் நிலையில் பதாஞ்சலி நிறுவனமும் தற்போது புதி சிம்முடன் களத்தில் இறங்கியுள்ளது!
ஆய்வுக்கு உட்படுத்தாத, 10 ஆயிரம் பள்ளி வாகனங்களை, இரண்டு
நாட்களில், ஆய்வுக்கு உட்படுத்தாவிட்டால், தகுதிச்சான்று ரத்து
செய்யப்படும் என, போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரேஷன் கடைகளில், 'பயோமெட்ரிக்' கருவியில், விரல் ரேகையை பதிவு செய்து, பொருட்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதில், உணவுத்துறை, தாமதம்செய்வதாக புகார் எழுந்துள்ளது
'ஊதிய
உயர்வு பேச்சில், உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி 30, 31ம்
தேதிகளில் வேலைநிறுத்தம் நடக்கும்' என, வங்கி ஊழியர்கள் சங்கம்
அறிவித்துள்ளது.
தொடக்கக் கல்வி - குழந்தைகளுக்கான
இலவசக் கட்டாயக் கல்விச் திட்டம் - 2009 ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்
31-05-2018 நிலவரப்படி விபரங்கள் கோருதல் தொடர்பாக தொடக்கக் கல்வி
இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்
தொடக்கக்
கல்வி பட்டய தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இணையதளம் மூலம் ஹால்
டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என மாவட்ட ஆசிரியர் கல்வி
மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வி தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்
என்று தேர்வெழுதிய மாணவர்களும் அவர்களது பெற்றோரும் மிகுந்த ஆவலுடன்
எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழில் ஆகம பயிற்சி பெற உதவும் ‘தமிழ் அருட்சுனைஞர்’ பட்டயப் படிப்பில்
சேர மே 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெய்வத்தமிழ் அறக்கட்டளை
அறிவித்துள்ளது.
தூத்துக்குடியில் தற்போது அமைதி திரும்பியிருப்பதாகவும், இன்று மாலைக்குள்
இணையதள சேவை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி
தெரிவித்துள்ளார்.
மே 6ம் தேதி நடைபெற்ற 'நீட்' தேர்வுக்கான விடைத்தாள்
இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இன்று முதல் 27ம் தேதி மாலை 5 மணி வரை
இணையதளத்தில் விடைத்தாளை பார்க்க முடியும்.
புதிய பாடத்திட்டத்தில் 'குயிக் ரெஸ்பான்ஸ் கோடு' (க்யூ.ஆர்., கோடு) என்ற
தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டதால், இனி ஆசிரியர்கள் 'ஸ்மார்ட் போன்'
இல்லாமல் பாடம் நடத்த முடியாது.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் புதிய உத்தரவின்படி, வட்டாரங்களில்
பணிபுரியும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்களாக
மாற்றப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பிரச்னை காரணமாக 3 மாவட்டங்களில் இணையவசதி
ரத்து செய்யப்பட்டதால் அந்த மாவட்ட மாணவர்கள் 10ம் வகுப்பு மறுகூட்டல்
செய்வதற்கான தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ‘தினத்தந்தி’ ரூ.34 லட்சம் கல்வி நிதி
மாவட்டத்தில் தலா 10 பேருக்கு வழங்கப்படுகிறது எஸ்.எஸ்.எல்.சி.
மாணவர்களுக்கு கல்வி நிதியாக, ‘தினத்தந்தி’ ரூ.34 லட்சம் வழங்குகிறது.
துாத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து
இன்று மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ -ஜியோ ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
செய்துள்ளது.ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியம், மாயவன்
கூறியதாவது:
பத்தாம்
வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. 'தற்காலிக
மதிப்பெண் சான்றிதழ் வரும், 28ல், வழங்கப்படும்' என, தேர்வுத்துறை
அறிவித்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறை பாடத்திட்டம் மேல்நிலைக்கல்வி தொழிற்கல்வி மற்றும்
கலைப்பிரிவு 2018-19 ம் கல்வியாண்டில் பெயர்கள் மாற்றம் மற்றும் முதன்மைப்
பாடங்கள் மாற்றம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அவர்களின்
செயல்முறைகள்!!!
பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மற்றும் மாற்றுத் திறனாளிகள்துறைச் செயலாளர் அளித்த ஒப்புதலையடுத்து, பகுதி நேர மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள், முற்றுகைப் போராட்டத்தைத் திரும்பப்பெற்றனர்.
பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களுக்கு இன்று தற்காலிக மதிப்பெண்
வழங்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு மார்ச் மாதம் நடந்தது. மே 16ம் தேதி
தேர்வு முடிவுகள் வெளியானது.
தொடக்கப் பள்ளியில் ஏற்பட்டுள்ள நிர்வாக மாற்றத்தால், அதிகார மையங்களுக்குள் போட்டி ஏற்பட்டுள்ளது. யாருடைய பேச்சை கேட்பது என, அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.
பிடித்தம் செய்த டிடிஎஸ் தொகையை இந்த மாத இறுதிக்குள் செலுத்தாத
நிறுவனங்களுக்கு தினமும் ₹200 வீதம் அபராதம் விதிக்கப்படும் என வருமான
வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
''அறிவித்தபடி,
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறிப்பிட்ட தேதியில் வெளியாகும். இதில்
எவ்வித மாற்றமில்லை,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன்
கூறினார்.
சென்னை, புதிய பஸ் பாஸ் வழங்கப்படும் வரை, பழைய பஸ் பாசைக் காட்டி,
மாணவர்கள், இலவசமாக பயணிக்கலாம்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர்
விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அரசு
கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், விண்ணப்பம் வழங்குவது குறித்து,
உயர்கல்வித் துறை முறையான அறிவிப்பு வெளியிடாததால், பெற்றோரும்,
மாணவர்களும் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
ஆசிரியர் பயிற்சி முடித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர்
தகுதித்தேர்வுக்கு இலவச பயிற்சி பெற மே.25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
என்று மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.
பிளஸ்
2 தேர்வில், முக்கிய பாடங்களில் மதிப்பெண் குறைந்துள்ளதால், அதிக
மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர வாய்ப்புள்ளதாக,
கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை எழுதியோர் தங்களின்
விண்ணப்பங்களில் ஏதேனும் தவறுகள் இழைத்திருந்தால் அதனைத் திருத்திக்
கொள்ளலாம் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ)
அறிவித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களின்கணக்கிலிருந்து 3 மாதத்துக்கு ஒருமுறை
15 ரூபாய் பிடித்தம் செய்யும் முறை தொடரும் என வங்கியின் தலைவர்
ரஜனீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
'மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவதற்கு, ஆதார் அடையாள
எண் அவசியம் இல்லை,'' என, மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர்,
ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.