Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Today Rasipalan 20.4.2018

மேஷம் இன்று தொழில் முதலீடு கிடைக்கும்.
எதையும் சந்திக்கும் தைரியம் உண்டாகும். தொழில்வகை எதிரிகள் உங்களது மாறாத தனித்தன்மையால் ஒதுங்கி விடுவார்கள். பிறருக்கு பணம் கொடுப்பதாக இருந்தால் அதை எழுத்துப்பூர்வமாக நடைமுறைப்படுத்துவதும் நல்லவர்களை முன்னிலையாகக் கொண்டு அவர்கள் முன் கொடுப்பதும் பாதுகாப்பு தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

ரிஷபம் இன்று ஆபத்து தரும் வகையிலான இடங்களில் கவனத்துடன் நடந்து கொள்வது நன்மையைத் தரும். வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கவும், புதிய சொத்துகள் வாங்கும் நிலையும் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9  

மிதுனம் இன்று கிடைத்த வாய்ப்பை முழு மனதுடன் செயல்படுத்தி வளர்ச்சி காண முடியும். நண்பர்களின் தேவையில்லாத ஆடம்பர செலவுகளுக்கு துணைபோகாமல் இருந்தால், பின்னால் வரும் பெரிய துன்பங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். பொருளாதாரமும், புகழும் உங்கள் நற்செயல்களுக்கு துணைபுரியும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6 

கடகம் இன்று கவனச் சிதறல்கள் மாறி நல்ல நிலை பெறுவீர்கள். போக்குவரத்து இனங்களில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். நண்பர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்க்கவும். பகுதி நேர பணிகளில் ஈடுபட்டு வருமானம் ஈட்டும் வாய்ப்பு கிட்டும். விட்டுக்கொடுத்து நடங்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7  

சிம்மம் இன்று வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நலன் தரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிட்டும் வாய்ப்பு உண்டு. மனதில் இருந்த சஞ்சலங்கல் சூரியனைக் கண்ட பனிபோல விலகிவிடும். சகதோழிகளுக்கு கொடுத்து உதவும் அளவுக்கு பொருளாதார நிலை வளம் நிறைந்ததாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 

கன்னி இன்று வீடு, பணியிடம் இவைகளில் ஏதேனும் ஒன்று மாறும் சூழ்நிலை உண்டு. சிலருக்கு பொன் ஆபரணங்களை புதுப்பிக்கும் வாய்ப்பு கிட்டும். மன தைரியத்துடன் அணுகும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். திருமணமான புதுப் பெண்களுக்கு புத்திரபேறு தாமதமின்றி கிடைக்கும் வாய்ப்பு உண்டு. அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

துலாம் இன்று சிறு தொழில் செய்பவர்கள் குழுவினராக இணைந்து அரசின் உதவி பெற்று தொழிலில் மேன்மை அடைவர். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குழந்தைகளால் பெருமை ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 7  

விருச்சிகம் இன்று பொருளாதார அசதி அதிகமாகும். அதிகமான வேலை வாய்ப்பு பெறுவார்கள். புதிய தொழ்ல்நுட்பத்தை புகுத்தி பொருளாதார வசதி பெறுவர். தொழிலில் கிடைக்கும் பணம் போதுமான அளவுக்கு இருக்கும். எதிரிகளின் தொல்லை நீங்கும். நண்பர்களால் அனுகூலம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7 

தனுசு இன்று சில சிக்கலான பேர்வழிகள் உங்களை ஆதரிப்பதாக கூறிக்கொண்டு அடைக்கலமாவது போல நடித்து உங்கள் பணத்திற்கும் பதவிக்கும் மறைமுகமாக தீங்கு விளைவிப்பார்கள். உங்களின் பாரம்பரிய குணங்களால் சிரமமின்றி தப்பிவிடலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3  

மகரம் இன்று மென்மையான சூழ்நிலையிலிருந்து மாறுபட்டு கடுமையான செயல்திட்டங்களை நிறைவேற்றும் வகையில் அடிக்கடி பயணம் மேற்கொள்வீர்கள். பொருளாதாரத்தில் உயர்வும், புகழும் பெறுவதில் மந்தநிலையும், பயணத்தால் அனுகூலமும் உண்டு. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

கும்பம் இன்று தொழில் நிறுவனம் நடத்துவோர் புத்திரர்களின் உதவியால் தொழில் மேன்மை பெறுவர். நீங்கள் மற்றவர்களிடம் பேசும் போது மிகுந்த நிதானம் காட்ட வேண்டும். இப்படிச் செய்தால் புகழ் தேடி வரும். புகழுக்கான ஆசையில் வீண் செலவுகள் உருவாகும் வாய்ப்பு உள்ளதால பணத்தை மிக கவனமாக கையாள வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3  

மீனம் இன்று உங்களது இயற்கையான மனதைரியத்தால் சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். வீடு, வாகனம் போன்றவற்றில் அனுகூலமான நிலை உருவாகும். புத்திர வகையில் செலவினங்கள் உண்டாகும். தொழில் வகையிலும் உறவினர்கள், நண்பர்கள் வகையிலும் ஏற்பட்ட பகை நீங்கி அனுகூலம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive