ஏப்ரல் 1ஆம் தேதியான இன்று முதல் புதிய நிதியாண்டு பிறக்கவுள்ளதால்
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரிகள் அனைத்தும் நாளை முதல் அமலுக்கு
வரவுள்ளது. அதுகுறித்து தற்போது பார்ப்போம்.
1. இன்று முதல் பங்குவர்த்தகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேல் முதலீடு செய்தவர்களுக்கு 10% வரி விதிக்கப்படுகிறது. பங்குகள் மட்டுமின்றி பரஸ்பர நிதியில் முதலீடு செய்திருந்தாலும் இந்த வரியை கட்ட வேண்டும்
2. வரி செலுத்துபவர்கள் இந்த ஆண்டு முதல் நிலையான கழிவுத்திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம், ரூ.40 ஆயிரம் வரை இந்த நிலையான கழிவுத்திட்டத்தில் மருத்துவ செலவு, போக்குவரத்து செலவும் அடங்கும்
3. இந்த நிதியாண்டு முதல் கூடுதல் வரி என்று கூறப்படும் செஸ் வரி 3%ல் இருந்து 4%ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வருமானம் இருப்பவர்கள் ரூ. 2,625 செஸ் வரியாகவும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருப்பவர்கள் ரூ.1,125, ரூ.2.50 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் ரூ.125 செஸ் வரி செலுத்த வேண்டும்.
4. சிறுதொழில் செய்பவர்கள் வருடம் ஒன்றுக்கு ரூ.250 கோடி வரை விற்று முதல் உள்ள நிறுவனங்களுக்கு கார்ப்பரேட்வரி 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 99 சதவீத நிறுவனங்கள் இதன்கீழ் வந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...