கோடை விடுமுறையின் காரணமாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு
100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகராட்சி போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.இதுத்தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோடை விடுமுறையையொட்டி, பொதுமக்கள் வசதிக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் நகரின் பல்வேறு இடங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கும், செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருத்தலங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும், வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக அண்ணாசதுக்கத்துக்கு 50 சிறப்புப் பேருந்துகளும், வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 20, திருவேற்காடு ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோயிலுக்கு 10, பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்கு 8, மாமல்லபுரத்துக்கு 5, சிறுவாபுரி முருகன் திருக்கோயிலுக்கு 4, கோவளத்துக்கு 3 என மொத்தம் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...