பிகாரில் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நேற்று (ஏப்ரல் 6) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிகார் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் பிகார் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் நடத்தும் அனைத்துத் தேர்வுகளுக்குமான கட்டணத்தைக் குறைப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி, ஆரம்பக் கட்டத் தேர்வுகளுக்கான கட்டணம் 600 ரூபாயிலிருந்து 150 ரூபாயாகவும், முதன்மைத் தேர்வுகளுக்கான கட்டணம் 750 ரூபாயிலிருந்து 200 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், போட்டித் தேர்வுகளில் பெண்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
பிகார் அமைச்சரவைச் செயலகத்தின் முதன்மைச் செயலாளர் அருண் குமார் சிங், “புதிய பணிகள் உருவாக்கப்படுவதற்கான பிகார் நிர்வாகப் பணியாளர் நிலைகளை மறுசீரமைப்பு செய்யவும் அரசு விதிகளில் மாற்றம் கொண்டுவரவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, துணை ஆட்சியர், மூத்த துணை ஆட்சியர், சார் செயலாளர், துணைச் செயலாளர், இணைச் செயலாளர் மற்றும் சிறப்புச் செயலாளர் ஆகிய பதவிகள் 1150 என்னும் எண்ணிக்கையிலிருந்து 1634 ஆக அதிகரிக்கப்படவுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...