தமிழகத்தில் உள்ள 6 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 3 அரசு உதவி பெறும்
கல்லூரிகளில் டிப்ளமோ முடித்து பணியாற்றி வருபவர்கள் பகுதி நேரமாக
பொறியியல் படிக்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“டிப்ளமோ முடித்துவிட்டு, தற்போது அரசு மற்றும் தனியார் பணியில் உள்ளவர்கள் பகுதி நேர பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் மே 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பகுதி நேர பொறியியல் படிப்புக்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த பின்னர் அதனை உரிய நகல் எடுத்து உரிய ஆவணங்கள் மற்றும் பதிவுக் கட்டணத்துடன் கோவை தொழில்நுட்ப கல்லூரிக்கு மே 12ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்ப கட்டணமாக எஸ்சி/எஸ்டி பிரிவினர் 300ரூபாய் செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் 600ரூபாய் செலுத்த வேண்டும். தரவரிசை பட்டியல் மே 30ஆம் தேதி வெளியிடப்படும். ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...