கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் அழைப்புச் சேவைக் கட்டணங்கள்
சராசரியாக நிமிடத்துக்கு 19 பைசாவாகவும், டேட்டா கட்டணங்கள் ஜிபி ஒன்றுக்கு
19 ரூபாயாகவும் குறைந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு
தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 4ஆம் தேதி மக்களவையின் கேள்வி நேரத்தின் போது இதுபற்றி எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான மனோஜ் சின்ஹா எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், “கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் அழைப்பு மற்றும் டேட்டா கட்டணங்கள் தொடர்ந்து குறைந்துகொண்டே வருகின்றன. 2016 ஜூன் முதல் 2017 டிசம்பர் வரையில் அழைப்புக் கட்டணங்கள் 60 சதவிகிதம் வரையில் குறைந்து நிமிடத்துக்கு 60 பைசாவாகவும், டேட்டா கட்டணங்கள் 90 சதவிகிதம் வரையில் குறைந்து 1 ஜிபி டேட்டா 19 ரூபாயாகவும் குறைந்துள்ளது. 2016 ஜூன் மாதத்தில் சராசரி அழைப்புக் கட்டணம் 49 பைசாவாகவும், சராசரி டேட்டா கட்டணம் ரூ.205 ஆகவும் இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
மொபைல்போன் இணைப்புகளைப் பொறுத்தவரையில், 2017 மார்ச் மாதம் 117 கோடியாக இருந்த மொபைல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 2018 ஜனவரியில் 115.2 கோடியாகக் குறைந்துள்ளது. உள்நாட்டில் இணைய இணைப்புகளை அதிகமாக வழங்கி வருவதாக மனோஜ் சின்ஹா மற்றொரு கேள்விக்குப் பதிலளிக்கையில் கூறினார். பாரத் நெட் உள்ளிட்ட திட்டங்கள் வாயிலாக 2.5 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு இணைய இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயித்துச் செயல்பட்டு வருவதாகவும் சின்ஹா விளக்கினார். 2018 மார்ச் 25 வரையில் மொத்தம் 1,13,964 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு பாரத் நெட் திட்டத்தின் கீழ் இணைய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...