சேலம்: வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை நடப்பு மாதத்திற்கு 45.50 குறைந்து, 1,232.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு வர்த்தக கேஸ் சிலிண்டர்களுக்கு மானியம் வழங்குவதில்லை. இதனால் இதன் விலையை ஒவ்வொரு மாதமும், எண்ணெய் நிறுவன கூட்டமைப்பு நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. இதன் காரணமாக மாதந்தோறும் வர்த்தக காஸ் சிலிண்டர் விலையில் ஏற்றம், இறக்கம் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக கேஸ் சிலிண்டர் 1,143க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஜூலையில் 1,074, ஆகஸ்டில் 1,023, செப்டம்பரில் 1,138, அக்டோபரில் 1,215.50. நவம்பரில் 1,285, டிசம்பரில் 1,370, ஜனவரியில் 1,360.50, பிப்ரவரியில் 1,358.50, கடந்த மாதம் (மார்ச்) 1,278 ஆக நிர்ணயிக்கப்பட்டது. நடப்பு மாதம் (ஏப்ரல்) 45.50 விலை குறைக்கப்பட்டு, 1,232.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் முழுவதும் இவ்விலையில் தான், வர்த்தக கேஸ் சிலிண்டர் விற்பனை செய்யப்படும்.
மானியமில்லா 14 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை, கடந்த மாதம் 722க்கு விற்கப்பட்ட நிலையில், நடப்பு மாதம் 36 குறைந்து, 686 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றத்தால், விலை குறைந்துள்ளது. அடுத்த சில மாதங்களிலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...