வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு புதிய ஆடை நெறி குறித்து உத்தரவிடப்படுவதாக நேற்று (ஏப்ரல் 18) வருமான வரித் துறை அறிவித்துள்ளது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு டெல்லியில் உள்ள வருமான வரித் துறை தலைமை அதிகாரியின் அலுவலகத்திலிருந்து வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, வருமான வரித் துறையின் அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களும் பணியிட அமைப்புக்கு ஏற்றவாறு சுத்தமான முறையான தோற்றத்தில் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில், “பெருமளவிலான ஊழியர்கள், முக்கியமாக இளம் வயதுடையவர்கள் அலுவலகத்துக்கு மிகச் சாதாரணமான ஆடை அணிந்து வருவதை அடிக்கடி காண முடிகிறது. இதை அவர்களிடம் எதிர்பார்க்கவில்லை.
அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாட்கள் சுத்தமான, முறையான, அடக்கமான, உரிய ஆடைகளை அணிந்து வர வேண்டும். அலுவலகத்துக்குள் சாதாரண மற்றும் விருந்துகளுக்கான உடைகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவுகளைக் கடைப்பிடிக்காத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆடை நெறிகளைக் கடைப்பிடிக்காதவர்கள் உடையை மாற்ற மீண்டும் வீட்டுக்கே அனுப்பப்படலாம் என்றும் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...