தமிழக அரசின் பெரும்பகுதி நிதி, அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கே செலவாகிறது, அதனால், கூடுதல் சம்பளம் கேட்டு போராடுவோர் சிந்திக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி பேசினார்.
சேலம் மாவட்டம், இடைப்பாடியில் புதிய கட்டடங்கள் திறப்பு மற்றும் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
இதில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது, தமிழகத்தில் எட்டு கோடி பேர் உள்ளனர். 13 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. இன்னும் கூடுதல் சம்பளம் வேண்டும் என ஊழியர்கள் போராடுகின்றனர்.
மாநில அரசு மூலம் 69, மத்திய அரசு மூலம் 31 சதவீத வரி அரசுக்கு கிடைக்கிறது. இதில் மாநில வரியில் 61 சதவீதம் ஊழியர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. மீதிர வரி மூலம் 7.87 கோடி பேருக்கு தேவையான திட்டப்பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால், போராடும் அரசு ஊழியர்கள் அவர்களை தூண்டும் எதிர்க்கட்சியினர் இதை சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அடிக்கிற கொள்ளையை ஏன் இன்னும் குறைக்க மாட்டேங்கிறீங்க? MLA க்கு எதற்கு இவ்வளவு சம்பளம்? வெறும் சம்பளத்தை மட்டும் பெற்று வாழும் நாணயமான MLA க்கள் எத்தனை பேர் உள்ளனர் தமிழ்நாட்டில்?
ReplyDeleteஒவ்வொரு மாதமும் 1லட்சத்து ஐயாயிரம் எந்த அப்பன் சொத்திலிருந்து எடுக்கிறீர்கள். கிம்பளமே பிழைப்பாய் இருக்கும் மந்திரிக்கும் எம் எல் ஏ க்களுக்கு சம்பளம் எதற்கு?
ReplyDeleteஒவ்வொரு மாதமும் 1லட்சத்து ஐயாயிரம் எந்த அப்பன் சொத்திலிருந்து எடுக்கிறீர்கள். கிம்பளமே பிழைப்பாய் இருக்கும் மந்திரிக்கும் எம் எல் ஏ க்களுக்கு சம்பளம் எதற்கு?
ReplyDeleteThen what about the freebies issued to public like mixie, grinder, tv, laptop etc. Is the govt getting those from foreign aid?
ReplyDeleteஅரசு ஊழியரும் முறையாக வரி செலுத்தும் இந்திய குடிமக்கள் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். மக்களுக்கு சேவை செய்வதும் , அரசுக்கு வருவாய் ஈட்டி தருவதும் அரசு ஊழியரே.அரசின் சொத்துக்களை கொள்ளையடிப்பவர்களையும் முறையாக வரி செலுத்தாமல் கருப்புபணம் பதுக்குபவர்களையும், அரசு வருவாயை முறையாக மக்களிடம் சேர்க்காமல் கொள்ளையடிப்பவர்களையும் விட்டுவிட்டு நிதிக்குழுவின் பரிந்துரைப்படி முறையாக உழைப்புக்கான ஊதியம் கேட்கும் அரசு ஊழியர்களை குறை சொல்லும்
ReplyDeleteஒரு முதல்வர். என்று இந்த நிலைமை மாறும்?