ஊதிய உயர்வைப் பெறுவதற்காக 80 சதவிகித ஊழியர்கள் பணிமாற்றத்தை விரும்புவதாகவும், இவர்கள் பெரும்பாலும் 25 முதல் 34 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதாகவும் இண்டீட் இணையதளத்தின் ஆய்வு கூறுகிறது.
இதில் 50 சதவிகிதப் பேர் தங்களது பணி சிறப்பாக உள்ளதாகவும், அதற்கான பலன்களை அளிக்க வேண்டும் எனவும் ஊதிய உயர்வுக்குக் கோரிக்கை வைக்கின்றனர். மற்றொரு தரப்பினர், அதிகரிக்கும் செலவுகள், விலைவாசி உயர்வு மற்றும் கூடுதல் பணி நேரம் ஆகியவற்றைக் காரணமாகக் கூறி ஊதிய உயர்வு கோருவதாக இந்த ஆய்வு கூறுகிறது. பெரும்பாலான ஊழியர்கள் அவர்களின் ஊதியத்தில் திருப்திகரமாக இல்லை என்றும், ஆண்களை விட அதிக பெண்களே ஊதியத்தில் திருப்தியின்றி இருப்பதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஊதிய உயர்வுக்குப் பதிலாக வேறு விதமான பலன்களை வழங்கலாம் என்று சில ஊழியர்கள் கருதுகின்றனர். வருடாந்தர விடுமுறை நாட்களை அதிகரிப்பதற்கு 47 சதவிகிதப் பேர் பரிந்துரைத்துள்ளனர். பணி நேரத்தை தங்களுக்கு ஏதுவானதாக மாற்ற 60 சதவிகிதப் பேர் பரிந்துரைத்துள்ளனர். 63 சதவிகிதப் பேர் சுகாதாரப் பலன்கள் வழங்கப் பரிந்துரைத்துள்ளனர். ஒரு பிரிவினர் தங்களது ஊதியம் திருப்தியளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 43 சதவிகிதப் பேர் தங்களது ஊதியம் திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...