பயணியருக்கு, ரயில்களில் விற்பனை
செய்யப்படும் உணவு வகைகள் மற்றும் அவற்றின் விலைகளை அறிவதற்கான, 'ஆப்'
எனப்படும் செயலியை, ஐ.ஆர்.சி.டி.சி., விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
சதாப்தி, ராஜ்தானி போன்ற ரயில்களில், டிக்கெட் முன்பதிவு செய்யும்
பயணியருக்கு இலவச உணவு வழங்கப்படும்.
இதுகுறித்த விபரங்களையும், ரயில்களில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகள் மற்றும் அவற்றின் விலையை தெரிந்து கொள்ளவும், புதிய செயலியை, ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழகம் வடிவமைத்துள்ளது.'ஆண்ட்ராய்டு' போன்கள் போன்றவற்றில், இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, ரயிலில் கிடைக்கும் உணவு வகைகள் மற்றும் விலையை தெரிந்து கொள்ளலாம்.
செயலி வடிவமைக்கப்பட்டு, சோதனை நிலையில் உள்ளதாகவும், விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும், ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...