பொதுவாக தலைக்கு குளிக்கும் போது, தலைமுடியை சீவும் போது அல்லது ஸ்டைலிங் செய்யும் போது தலைமுடி உதிர்வது என்பது சாதாரணம். அதுவும் ஒரு நாளைக்கு ஒருவருக்கு 50 முதல் 100 முடிகள் உதிர்வது என்பது சகஜம். ஆனால் எப்போது ஒருவருக்கு அளவுக்கு அதிகமாக தலைமுடி கொட்டினால், அப்போது தான் மிகுதியான கவலைக்குள்ளாகக் கூடும்.
ஒருவருக்கு தலைமுடி உதிர்வதற்கு மரபணுக்கள், மன அழுத்தம், கெமிக்கல் கலந்த தலைமுடி பராமரிப்பு பொருட்கள், ஹேர் ஸ்டைலிங் பொருட்கள். மோசமான டயட், காலநிலை மாற்றம் மற்றும் மோசமான தலைமுடி பராமரிப்பு போன்ற பல காரணங்கள் உள்ளன. ஆனால் சில சமயங்களில் தலைமுடி உதிர்வற்கு ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளும் காரணம். ஒருவருக்கு இருக்கும் ஆரோக்கிய பிரச்சனை தெரிந்துவிட்டால், தலைமுடி அதிகம் உதிர்வதற்கான காரணம் தெரிந்து, அதற்கு ஏற்ப பராமரிப்புக்களைக் கொடுக்க முடியும். இங்கு தலைமுடி உதிர்வதற்கான சில காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து, உங்களுக்கு இப்பிரச்சனைகள் உள்ளதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
அலோபியா ஏரீட்டா
அலோபியா ஏரீட்டா என்பது ஒரு ஆட்டோஇம்யூன் கோளாறு. இப்பிரச்சனை இருந்தால், ஒருவருக்கு தலைமுடி நினைத்திராத அளவில் கொட்டும். இந்த கோளாறு ஆண் மற்றும் பெண் என இருபாலரையும் பாதிக்கும். இப்பிரச்சனை இருப்பின், ஸ்கால்ப்பில் வழுக்கை ஏற்பட்டது போன்று இருக்கும். இப்படி வழுக்கை ஏற்பட்ட இடத்தில் ஒரு சிறு முடியின் வளர்ச்சியைக் கூட காண முடியாது.
பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS)
உங்களது தலைமுடி எலி வால் போன்று மெலிந்தோ, அளவுக்கு அதிகமாக தலைமுடி உதிரவோ செய்தால், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் இருக்க வாய்ப்புள்ளது. பிசிஓஎஸ் என்பது உடலில் டெஸ்டோஸ்டிரோன் அல்லது ஆன்ட்ரோஜென் ஹார்மோன்களின் அளவு அதிகமாகி, மயிர்கால்களில் உள்ள நொதிகளுடன் இணைந்து, மயிர்கால்களைப் பெரிதாக பாதித்து, உதிரச் செய்யும்.
இரும்புச்சத்து குறைபாடு
இரும்புச்சத்து குறைபாடு இருப்பவர்களுக்கு தலைமுடி அதிகம் கொட்டுவதோடு, முடி உடைய ஆரம்பிக்கும். உடலில் இரும்புச்சத்தின் அளவு குறையும் போது, உடலில் போதுமான இரத்த சிவப்பணுக்கள் இல்லாமல், உடல் முழுவதும் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும். இப்படி மயிர்கால்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காத பட்சத்தில், தலைமுடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல், அதன் வளர்ச்சியும், வலிமையும் குறைந்து, உதிர ஆரம்பிக்கும். இந்நிலையில் உடனே இரும்புச்சத்துள்ள உணவுகளையும், சப்ளிமெண்ட்டுகளையும் எடுப்பதன் மூலம், தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்.
்டு
ஹைப்போ தைராய்டு என்பது தைராய்டு ஹார்மோன்கள் போதுமான அளவு சுரக்காமல் இருக்கும் நிலையாகும். இப்படி தேவைக்கு குறைவாக தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கும் போது, தலைமுடியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, தலையில் மட்டுமின்றி, புருவங்களிலும் தலைமுடி உதிர ஆரம்பிக்கும். அத்துடன் உடல் பருமன், சோர்வு, மலச்சிக்கல், மன இறுக்கம் மற்றும் எதிலும் கவனம் செலுத்த முடியாமை போன்ற பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.
லூபஸ்
லூபஸ் என்பது ஒரு வகையான ஆட்டோஇம்யூன் நோய்களாகும். இந்த வகை நோய் இருந்தால், தலைமுடி உதிரும். இந்த நோயினால், நோயெதிர்ப்பு மண்டலமானது ஆரோக்கியமான திசுக்களை தாக்கி, அழற்சியை உண்டாக்கும். ஒருவருக்கு லூபஸ் நோய் இருந்தால், அதன் முதல் அறிகுறியாக தலைமுடி உதிர்ந்து மெலிய ஆரம்பிக்கும்.
பிரசவத்திற்கு பின்....
பிரசவத்திற்கு பின்பு பெண்களின் உடலில் ஏற்படும் திடீர் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் அளவுக்கு அதிகமான தலைமுடி உதிர ஆரம்பிக்கும். ஆனால் ஹார்மோன்கள் சீரான நிலைக்கு வந்த பின், தலைமுடி உதிரும் பிரச்சனை அப்படியே சரியாகிவிடும். அதேப்போல் எப்போதெல்லாம் பெண்களின் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் தலைமுடி அதிகம் உதிரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஸ்கால்ப் தொற்று
ஆரோக்கியமற்ற ஸ்கால், மயிர்கால்களில் அழற்சியை உண்டாக்கி, தலைமுடி வளர்வதில் சிரமத்தை ஏற்படுத்தும். ஸ்கால்ப் தொற்றுக்களில் பல வகைகள் உள்ளன. அதில் ஒரு வகையான பூஞ்சை தொற்று தான், ஸ்கால்ப்பில் ஏற்படும் படர்தாமரை. பெரும்பாலும் இந்த பிரச்சனையால் குழந்தைகள் அதிகம் கஷ்டப்படுவார்கள். இருப்பினும் எந்த வயதிலும் இந்த தொற்று ஏற்படலாம். ஜிங்க் குறைபாடு ஒருவரது உடலில் ஜிங்க் சத்து மிகவும் குறைவாக இருந்தால், அதன் விளைவாக தலைமுடி பலவீனமாகி, உடைந்து, உதிர ஆரம்பிக்கும்.
ஜிங்க் குறைபாடு
தலைமுடியை மட்டுமின்றி, புருவங்கள் மற்றும் கண் இமைகளில் உள்ள முடியையும் உதிரச் செய்யும். ஜிங்க் செல்களின் பெருக்கத்திற்கும், திசுக்களின் வளர்ச்சிக்கும், புதுபிக்கவும் அத்தியாவசியமான கனிமச்சத்தாகும். எனவே இந்த சத்து குறையாமல் இருக்க, ஜிங்க் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள். அதுவும் பிரேசில் நட்ஸ், வால் நட்ஸ், முந்திரி, பாதாம் போன்றவற்றை அதிகம் சாப்பிடுங்கள். மேலும் மாட்டிறைச்சி, முட்டை, கடல் சிப்பி, , நண்டு, பருப்பு வகைகள், பயறுகள், முழு தானிய செரில்கள் போன்றவற்றையும் சாப்பிடுங்கள்.
புரோட்டீன் குறைபாடு
தலைமுடி புரோட்டீனால் ஆனது. இந்த புரோட்டீன் ஒருவரது உடலில் குறைவாக இருந்தால், அவர்களுக்கு தலைமுடி உதிர்வதோடு, தலைமுடியின் வளர்ச்சியும், தரமும் நேரடியாக பாதிக்கப்படும். புரோட்டீன் சத்து உடலின் பல்வேறு செயல்பாட்டிற்கு அவசியமானது. புரோட்டீன் குறைபாடு ஒருவக்கு ஏற்பட்டால், அது மயிர்கால்களை பலவீனமாக்குவதோடு, தலைமுடியை உதிரச் செய்வதோடு, நரைக்கவும் செய்யும். ஆகவே போதுமான புரோட்டீன் அன்றாடம் கிடைக்கும் படி செய்யுங்கள்.
தமனி அடைப்புக்கள்
தமனிகளில் அடைப்புக்கள் இருந்தால், அது தலைமுடியை உதிரச் செய்யும். பெரும்பாலும் ஆண்களுக்கு தான் இம்மாதிரியான பிரச்சனைகள் வரும். அதுவும் உயர் இரத்த அழுத்தம் அல்லது உயர் கொலஸ்ட்ரால் அளவு உள்ளவர்கள் தான் இந்த பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...