சென்னிமலையில்,
அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு, பள்ளி இறுதி நாளான நேற்று, அசைவ
விருந்து படைத்து, ஆசிரியர்கள் அசத்தினர்.தமிழகம் முழுவதும் அரசு
தொடக்கப்பள்ளிகளில், நேற்றுடன் வகுப்பு முடிவுக்கு வந்தது. இதை, பல
பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடினர்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை யூனியன், பசுவபட்டி அரசு தொடக்கப்பள்ளி மாணவ - மாணவியருக்கு, அசைவ விருந்து வைக்கப்பட்டது.நாட்டுக்கோழி பிரியாணி, வறுவல், முட்டை என, வாழை இலையில் பரிமாறப்பட்டது. கோழிகளை, உள்ளூர் இளைஞர்கள் இலவசமாக வழங்கினர். உணவை, ஆசிரியர்களே சமைத்தனர்.'அரசு பள்ளிகளுக்கு, ஏழை குழந்தைகள் மட்டும் தான் வருகின்றனர். எங்கள் அன்பை வெளிப்படுத்த, கடைசி நாளில் விருந்து உபசரிப்பு செய்தோம்' என்று ஆசிரியர்கள் கூறினர்.
இதை எங்கள் பள்ளியில் மாதம் ஒருமுறை செய்கிறோம். ஊர் மக்களின் எந்தப் பங்களிப்பும் இல்லாமல்.
ReplyDelete