காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் இந்த இரண்டு வார்த்தைகளும்தான் மனித இனத்தின் தற்போதைய சவால்கள். இவற்றின் விளைவுகளைச் சமாளித்து பூமியைச் சீராக வைக்க வேண்டிய கடமை ஒவ்வொரு நாட்டுக்கும் இருக்கிறது. ஆனால், இதற்கான முன்னெடுப்புகளை எடுப்பது என்னவோ சில நாடுகள்தான். அந்த சில நாடுகளில் எப்போதும் சுவீடன் முன்னணியில் இருக்கிறது. காலநிலை மாற்றத்தைக் கணக்கில் கொண்டு சுவீடன் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அப்படியான ஒரு முயற்சிதான் மின்சார வாகனங்கள் இயங்கும்போதே சார்ஜ் செய்துகொள்ளும் வகையில் மின்மயமாக்கப்பட்ட சாலைகள்.
உலகிலேயே முதன்முறையாக இப்படியான சாலைகளை உருவாக்கியுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...