சீனாவில் பல்வேறு பாடப் பிரிவுகளுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தும்
டிஏஎல் கல்வி நிறுவனத்தின் கணக்கு ஆசிரியர் தற்போது கோடீஸ்வரர்
ஆகியுள்ளார். அந்நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஆண்டைக்காட்டிலும் இருமடங்கு
அதிகரித்துள்ளது.
சீனப் பெற்றோர் ஒவ்வொருவரும் தங்களின் குழந்தைகளின் கல்விக்காக ஆண்டுதோறும் சராசரியாக 42,892 டாலர் ரூபாய்கள் (இந்திய மதிப்பில் 28 லட்சத்து 38 ஆயிரத்து 807 ரூபாய்) செலவு செய்கிறார்கள். அதில் 93 சதவிகிதத் தொகை தனியார் டியூஷன் எடுப்பவர்களுக்கு சென்றடைவது கடந்த ஆண்டு எச்.எஸ்.பி.சி.ஹோல்டிங் நிறுவனத்தின் ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. தனியார் டியூஷன்களுக்கு சீனாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்தத் வரவேற்பே டிஏஎல் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பை 21.1 பில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் சுமார் 139650.35 கோடி) உயர்த்தியுள்ளது. இந்தத் தொகை இதன் போட்டி நிறுவனமான ஓரியண்டல் குழுமத்தின் வருவாயை விட 46 சதவிகிதம் அதிகமாகும்.
டிஏஎல் நிறுவனத்தில் லியூ என்பவர் சாதாரண கணக்கு ஆசியராகச் சேர்ந்து 2005ஆம் ஆண்டு நடுநிலை கல்வி இயக்குநராக மாறினார். பின்னர் ஆராய்ச்சியாளர் குழு, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றில் தலைமை பொறுப்பேற்று தற்போது தலைமை இயக்க அதிகாரியாகப் பணியாற்றி வருவது அந்நிறுவனத்தின் இணையத்தளம் வாயிலாகத் தெரியவந்துள்ளது.
ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸிடமிருந்து கிடைத்த தகவலின்படி இவர் தற்போது 1 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 6618.50 கோடி ரூபாய்) மதிப்பிலான அந்நிறுவனத்தின் பங்குகளைக் கொண்டுள்ளார். அதேபோல் இந்நிறுவனத்தின் மற்றொரு நிறுவனரான சங் பங்ஸின் 6.6 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 43672.20 கோடி ரூபாய்) மதிப்பிலான பங்குகளைக் கொண்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...