புறக்கணிப்பு... புறக்கணிப்பு... ஆசிரியர் கூட்டணி முடிவால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
வரும் 24ம் தேதி முதல் 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை
புறக்கணித்து போராட்டம் நடத்தப் போவதாக தமிழக ஆசிரியர் கூட்டணி
அறிவித்துள்ளது.
தமிழக ஆசிரியர் கூட்டணி ஐம்பெரும் விழா திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அகில் இந்திய செயலாளர் கூறியதாவது:
மத்திய அரசு அறிவித்த 7வது ஊதியக்குழுவை தமிழக அரசு உடன் அமல்படுத்த வேண்டும். கல்வித்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வருகிறோம்.
கோரிக்கைகளை அரசு இதுவரை ஏற்கவில்லை. கல்வி நிலையங்களை மூடும் நடவடிக்கையிலும், ஆசிரியர் பணியிடங்களை குறைக்கும் நடவடிக்கையிலும் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.
இதை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 24ம் தேதி முதல் 10ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விடைத்தாள் பணியில் ஈடுபடாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...