அருப்புக்கோட்டையில் உள்ள, தேவாங்கர் கலை கல்லுாரி கணித பேராசிரியை,
நிர்மலாதேவி, தன்னிடம் படிக்கும், பி.எஸ்சி., மாணவியரை, தவறான வழிக்கு
துாண்டிய விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியான, 'ஆடியோ' பதிவில், கல்லுாரி நிகழ்ச்சிகளுக்கு,
வி.ஐ.பி.,க்கள் என்ற, முக்கிய பிரமுகர்கள் வருகை தரும்போது, சில விஷயங்கள்
தேவைப்படுவதாக, மாணவியரிடம் நிர்மலா தேவி கூறியுள்ளார். இதனால்,
பெற்றோர்களும், கல்வியாளர்களும், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில்,
உபசரிப்பு, வரவேற்பு, விருந்து போன்றவற்றில், மாணவியர் மற்றும்
பேராசிரியைகளை பங்கேற்க அனுமதிக்க வேண்டாம் என, கல்லுாரி முதல்வர்களுக்கு,
உயர் கல்வித் துறை சார்பில், சுற்றறிக்கை அனுப்ப உள்ளதாக, அதிகாரிகள்
தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...