தமிழகத்தில் 2018-2019 கல்வி ஆண்டு முதல் 3 ஆயிரம்பள்ளிகளில் 6, 7, 8
ஆகிய வகுப்புகள் "மிடுக்கு வகுப்பறை'களாக (ஸ்மார்ட் கிளாஸ்) மாற்றப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 390 மாணவர்கள் பயிற்சி பெற்றுவருகின்றனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இம்முகாமை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.2018-19 கல்வி ஆண்டு முதல் 1, 6, 9, 11ஆம் வகுப்புகளுக்கு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மிஞ்சும் அளவுக்கு புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.மேலும் 3 ஆயிரம் பள்ளிகளில் 6, 7, 8ஆம் வகுப்புகள் மிடுக்கு வகுப்பறைகளாக மாற்றப்படும். அனைத்து பள்ளிகளிலும் 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில்,ரூ. 463 கோடி செலவில் இணையதளம் மூலம் கல்வி கற்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும். 10 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை சில ஆசிரியர் சங்கங்கள் புறக்கணித்தாலும், அரசு அறிவித்தப்படி குறிப்பிட்ட நாளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
போட்டித் தேர்வுகளுக்காக தயார் செய்துள்ள மாணவர்களின் முயற்சி, வெற்றியாகவும் மாற வேண்டும் என்றார் அவர். ஆய்வின்போது வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், முதன்மை கல்வி அலுவலர் ச.கோபிதாஸ், எம்எல்ஏ வெ.ப.பா.பரமசிவம், முன்னாள் மேயர் வி.மருதராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...