ஆறாயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை குறைப்பதால்
அரசு நடுநிலைப் பள்ளிகளை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது,'' என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலர் பேட்ரிக் ரெய்மண்ட் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: தற்போது 6,7,8 ம் வகுப்புகளில் 100 மாணவர்களுக்கு ஒரு தலைமை ஆசிரியர், மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர்.
உபரி என கணக்கிட்டு ஒரு ஆசிரியரை குறைப்பதால், மூன்று ஆசிரியர்கள் சேர்ந்து ஐந்து பாடங்களை நடத்துவது சாத்தியம் ஆகாது. ஏற்கனவே ஆங்கிலம், கணிதம், அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் தங்கள் பாடத்துடன் தமிழ், சமூக அறிவியல் பாடத்தை கூடுதலாக எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் உபரி என கூறி மேலும் ஒரு பாட ஆசிரியர் குறையும் போது மாணவர்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள்.உபரி என கணக்கிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் 200 பேர், கோவையில் 173 என ஆறாயிரம் ஆசிரியர் பணியிடம் குறைக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆறாயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை குறைப்பதால் அரசு நடுநிலைப் பள்ளிகளை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது,'' என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலர் பேட்ரிக் ரெய்மண்ட் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: தற்போது 6,7,8 ம் வகுப்புகளில் 100 மாணவர்களுக்கு ஒரு தலைமை ஆசிரியர், மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர்.
உபரி என கணக்கிட்டு ஒரு ஆசிரியரை குறைப்பதால், மூன்று ஆசிரியர்கள் சேர்ந்து ஐந்து பாடங்களை நடத்துவது சாத்தியம் ஆகாது. ஏற்கனவே ஆங்கிலம், கணிதம், அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் தங்கள் பாடத்துடன் தமிழ், சமூக அறிவியல் பாடத்தை கூடுதலாக எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் உபரி என கூறி மேலும் ஒரு பாட ஆசிரியர் குறையும் போது மாணவர்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள்.உபரி என கணக்கிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் 200 பேர், கோவையில் 173 என ஆறாயிரம் ஆசிரியர் பணியிடம் குறைக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...