சமூக வலைதளங்களில் பரவும் பணி நியமனம் குறித்த தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்களை வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
சென்னையில் உள்ள வருமான வரித்துறையில் பல்வேறு பதவிகளுக்கு இணையதளத்தின் வழியாக பணி நியமன விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம் என வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இந்நிலையில் www.incometaxindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம், இத்தகைய பணி நியமன நடைமுறை எதையும் மேற்கொள்ளவில்லை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
மேலும், வருமான வரித்துறையின் அரசிதழ் பதிவு பெறாத பல்வேறு பதவிகளுக்கான பணி நியமனம் இத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் குறிப்பிட்ட நடைமுறையின்படி பணியார் தேர்வாணையத்தால் மட்டுமே செயல்படுத்தப்படும். எனவே, வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரப்பப்படும் தவறான செய்திகளைப் பார்த்து ஏமாற வேண்டாம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...