இந்தியா பொருளாதாரத்தில் மட்டும் வளர்ச்சி அடையவில்லை.
சர்க்கரை
நோயாளிகளின் எண்ணிக்கையிலும் வளர்ச்சியடைந்துள்ளது என இந்திய மருத்துவக்
கவுன்சி்ல் அறிக்கை தெரிவித்துள்ளது.கடந்த 16 ஆண்டுகளாகச் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை படிப்படியாக கூடி வருவதாக மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
தற்போது உலகளவிலுள்ள சர்க்கரை நோயாளிகளில் 49 விழுக்காடு நோயாளிகள் இந்தியாவில்தான் உள்ளனா். 2017இன் ஆய்வின்படி, 72 மில்லியன் சர்க்கரை நோயாளிகள் உள்ளனா். இது வரும் 2025இல் 134 மில்லியன்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நாடு எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவாலாகும். ஆனால், இந்நோயை கட்டுப்படுத்த எந்த முயற்சிகளும் மேற்கொள்ளாமல் அதே சமயத்தில் 50 கோடி மக்களுக்கு இலவசக் காப்பீடு திட்டத்தை அளிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிக்கையின்படி சர்க்கரை நோய் 64 விழுக்காடு பரவலாகி வருகிறது. உலக வங்கியின் அறிக்கையின்படி, இந்தியாவின் சராசரி வருமானம் 380 டாலர்களிலிருந்து (ரூ.24,867) 1670 டாலர்களாக(ரூ.1,09,000) அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில் 123 விழுக்காடு சர்க்கரை நோயும் அதிகரித்துள்ளது.
தேசிய குடும்ப சுகாதார சர்வே 2015-2016ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் செல்வந்த குடும்பங்களில் அவர்களின் வசதிக்கேற்ப ஐந்து குழுவாகப் பிரிக்கப்பட்டனர். அதில் 2.9 விழுக்காடு பெண்களும் சர்க்கரை நோயாளிகளாக உள்ளனர்..
உலகமயமாக்கல் பொருளாதார கொள்கைகள் நடுத்தர வர்க்கத்தையும் புதிய பணக்காரர் வர்க்கத்தையும் தோற்றுவித்தது. இவர்கள் அதிகமான பணத்தைச் சுவையான மற்றும் வித்தியாசமான உணவுகளுக்கு செலவழிக்கத் தொடங்கினர். இவற்றிலுள்ள சத்துகள் மற்றும் தீய அம்சங்கள் இருப்பதைப் பற்றி கவலைப்படவில்லை.
அதேபோல உடலுழைப்பு அதிகமாக இல்லாத பணிகளும் அதிகரித்தன. இத்துடன் அதிகமான மன அழுத்தங்களை உருவாக்கும் பணிகளும் சூழல்களும் உறவுச் சிக்கல்களும் உருவாகின. இவை சர்க்கரை நோய் உருவாவதற்கான முக்கிய காரணிகள் ஆகும். இவை தவிர்த்து துரித உணவுகள் அல்லது ஜங் புட் எனப்படும் துரித உணவுகள் (புரோட்டா, பர்கர், பீட்சா போன்றவை) இவற்றில் நார்ச்சத்து இருக்காது என்பதால் ஜீரணமாவதும் கடினம். அத்துடன் இவற்றிலுள்ள அதிகமாக கார்போ ஹைட்ரேட் (சுகர்) இருப்பதால் ரத்த ஓட்டத்தில் அளவுக்கு அதிகமான குளுக்கோஸ் நீரிழிவு நோய்க்கு அடிப்படையாக மாறுகிறது. மேலும் ரசாயனம் கலக்கப்பட்ட உணவு பயிர்கள் குளிர்பானங்கள் ஆகியனவும் இந்தப் பட்டியலில் சேருகின்றன.
இதற்கு உடனடியான தீர்வு, உணவு முறை முழுவதும் மாற்றப்பட வேண்டும். அதற்குத் திட்டங்களை அரசு தீட்ட வேண்டும். துரித உணவுகள் தடை செய்யப்பட வேண்டும். அமைதியான முறையில் ஆட்களைக் கொல்லும் சர்க்கரை நோய் உடனடியாக கண்டறியப்பட்டு சிகிச்சைகள் தொடங்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்குத் தனியான அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும். அது உடனடியான சிகிச்சை முறைகளுக்கு வழிவகுக்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...