தனியார் காப்பீட்டு நிறுவனம் நடத்திய போட்டியில், அகில இந்திய அளவில்,
திருவாரூர், அரசு பள்ளி மாணவி, தங்கப் பதக்கம் பெற்று உள்ளார். அவருக்கு,
அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைத்துஉள்ளது.
தனியார் காப்பீட்டு நிறுவனம் ஒன்று, ஆண்டுதோறும்
சமுதாய ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், மாணவ - மாணவியருக்கு
போட்டிகளை நடத்துகிறது.
கட்டுரை போட்டி : இந்த ஆண்டு நடந்த போட்டிக்கு, நாடு முழுவதும் இருந்து, 4,400 பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு, குறிப்பிட்ட தலைப்பில், கட்டுரை மற்றும் நேர்முக போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதி போட்டி, டில்லியில் நடந்தது. திருவாரூரைச் சேர்ந்த, அரசு பள்ளி மாணவி, பானுபிரியா வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் வென்றார். டில்லியில் நடந்த விழாவில், 'பேட்மின்டன்' வீராங்கனை, சாய்னா நேவால், பரிசு வழங்கினார். சிறுமியர், பருவ வயதை எட்டும் நிகழ்வுகளில், அவர்களுக்கு, கிராமங்களில் மேற்கொள்ளப்படும் மூட பழக்கங்கள் மற்றும் தீண்டாமை குறித்து, மாணவி பானுபிரியா, இந்த போட்டியில் கட்டுரை எழுதியுள்ளார். திருவாரூர் மாவட்டம், காளாச்சேரி மேற்கு கிராமத்தில் உள்ள, பஞ்சாயத்து ஒன்றிய நடுநிலை பள்ளியில், பானுபிரியா, 8ம் வகுப்பு படிக்கிறார்.
வாழ்த்து : இந்த போட்டியில், டில்லி மாணவி, இஷிதா மங்க்ளாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருவரும், தனியார் நிறுவன செலவில், அமெரிக்கா செல்ல உள்ளனர். அங்கு, வரும், 26 முதல், மே, 1ம் தேதி வரை நடக்கும், பரிசளிப்பு விழா மற்றும் அதை சார்ந்த நிகழ்ச்சிகளில், இந்த மாணவியர் பங்கேற்கின்றனர். மாணவி பானுபிரியா, தன் தாய் கோமதி மற்றும் ஆசிரியர் ஆனந்துடன், நேற்று சென்னை வந்து, பள்ளிக் கல்வி செயலர், பிரதீப் யாதவை சந்தித்து, வாழ்த்து பெற்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...