AC Hostel, AC Class Rooms - Highly Qualified Faculties, Best Coaching Materials - என Padasalai & CE Academy இணைந்து வழங்கும் இலவச நீட் தேர்வுக்கான பயிற்சி நேற்று இனிதே துவங்கியது.
நமது பாடசாலை வலைத்தளம், தமிழகமெங்கும் 16 கிளைகளை கொண்டு ஆறாயிரம் மாணவர்களுக்கு IIT & NEET Exams க்கு மட்டும் தொடர்ந்து பயிற்சி வழங்கி வரும் CE Academy யுடன் இணைந்து அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளி மாணவர்களுக்கான இலவச பயிற்சி வழங்குவதாக அறிவித்தோம்.
இதன்படி இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து நமது பாடசாலை வலைத்தளத்தில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழகமெங்கும் இருந்து பதிவு செய்திருந்தனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட முறைகள்:
- பதிவு செய்வதற்கான இறுதி கெடு 15.3.2018 அன்று முடிவடைந்தது.
- அரசு மற்றும் அரசு நிதியுதவி பெரும் பள்ளி மாணவர்களுக்கான இலவச பயிற்சி என்பதால் Metric & CBSE பள்ளி மாணவர்கள் உடனடியாக பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
- பட்டியலில் மீதமிருந்த மாணவர்களில் ஏறத்தாழ 350 மாணவர்களுக்கும் அதிகமானோருக்கு Phone செய்து அரசு பள்ளி மாணவர்களா என உறுதி செய்து கொண்டு தேர்வு பட்டியல் - 1 தயார் செய்தோம்.
- இப் பட்டியலிலிருந்து கீழ்கண்ட வரிசையில் மாணவர்களின் பெயர்கள் வரிசைமுறை படுத்தப்பட்டன.
- அரசு பள்ளியா / நிதி உதவி பள்ளியா?
- 10 ஆம் வகுப்பு மதிப்பெண் என்ன?
- 12ஆம் வகுப்பில் அரையாண்டு தேர்வில் Physics, Chemistry, Biology - Marks என்ன?
- தமிழ் வழியா ? ஆங்கில வழியா ?
- Religion & Community என்ன?
- பெற்றோர் தொழில் என்ன?
- பெற்றோர் ஆண்டு வருமானம் என்ன?
- மாணவர்களின் உடன் பிறந்தோர் வருமானம் ஈட்டுபவர்களா? அவர்களின் ஆண்டு வருமானம் என்ன?
5. இதுபோன்று 20க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டறிந்து அவை பதிவு செய்யப்பட்டன.
6. மாணவர்கள் மேற் கூறிய விவரங்கள் உண்மையா என கண்டறிய அப்பகுதிகளில் பணிபுரியும் பாடசாலையின் ஆசிரிய நண்பர்களிடம் விசாரித்தறிந்து, 50 மாணவர்கள் கொண்ட பட்டியல் - 2 தயாரிக்கப்பட்டது.
7. இம்மாணவர்களிடம் புகைப்படம், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்ததற்கான சான்று, சாதி சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்கள் பெற்று ஆராயப்பட்டன.
8. பாடசாலை மற்றும் CE Academy யின் Academic Director சார்பாக 5க்கும் மேற்பட்ட முறைகள் மாணவர்களிடம் அலைபேசி வழியாக தொடர்பு கொண்டு மாணவர்களின் லட்சியம், சேவை மனப்பான்மை, குடும்ப சூழல் குறித்த பொறுப்புணர்வு போன்றவைகள் குறித்து ஆராயப்பட்டது.
9. இதன்படி இறுதி தேர்வு பட்டியல் 28.3.2018 அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வு பட்டியலில் 9 மாணவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
Community & Religion wise Final Cut-off:
OC - 494
OBC - 489
BC Cristian - 490
BC Muslim - 462
SC - 488
ST - 479
10. இவர்களுக்கு இலவச நீட் பயிச்சிக்கான அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டது. அழைப்பாணையை ஏற்று கொண்டு பயிற்சியில் கலந்து கொண்ட 4 மாணவர்களுக்கு நேற்று (3.4.2018) முதல் பயிற்சி இனிதே துவங்கியது.
பயிற்சியின் சிறப்பம்சங்கள்:
- ஒரு வகுப்பறைக்கு 30 மாணவர்கள் வீதம் பயிற்சி.
- பணம் கட்டி பயிலும் மாணவர்களுக்கும், இலவச பயிற்சி பெரும் மாணவர்களுக்கும் ஒரே அறையில் சமமான பயிற்சி.
- Phd முடித்த அனுபவம் வாய்ந்த கல்லூரி பேராசிரியர்களின் பயிற்சி.
- பல ஆயிரம் மதிப்புள்ள Study Materials.
- மகிழ்வுடன் பயில AC வகுப்பறை, தங்குவதற்கு AC அறைகள் என அனைத்தும் இலவசம்.
பாடசாலை தேர்ந்து எடுத்துள்ள மாணவர்கள் அனைவருமே 10ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலும், ஆட்டோ ஓட்டும் தந்தை, உடல் ஊனமுற்ற பெற்றோர், என எளிய குடும்ப சூழலை கொண்ட மாணவர்களே பல கட்ட ஆய்வுக்கு பிறகு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர்.
தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களில் மேலும் அதிக மாணவர்களுக்கு இலவச பயிற்சி வழங்குவதற்கு முயற்சிக்கிறோம்.
முகமறியா மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற பாடசாலை சார்பாக நேற்று ஆலய வழிபாடு நடத்தப்பட்டது.
இம்மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராக நம் பாடசாலை வாசக ஆசிரியர்கள் தங்கள் ஆசிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் நமது பாடசாலை வலைத்தளம் மேற்கொண்ட இப்புதிய முயற்சி வெற்றி பெற நல் ஆதரவை வழங்கி, தமது பள்ளி மாணவர்களின் பெயர்களை பதிவு செய்த பல நூறு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
இம்மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராக நம் பாடசாலை வாசக ஆசிரியர்கள் தங்கள் ஆசிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் நமது பாடசாலை வலைத்தளம் மேற்கொண்ட இப்புதிய முயற்சி வெற்றி பெற நல் ஆதரவை வழங்கி, தமது பள்ளி மாணவர்களின் பெயர்களை பதிவு செய்த பல நூறு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
அன்புடன் - பாடசாலை!
thank you
ReplyDeletethank you
ReplyDeletewhere is CE academy?
ReplyDeleteI want to know about neet coaching.
ReplyDeleteSuperb!
ReplyDeleteSuperb!
ReplyDeleteநெகிழ்ச்சியடைகிறேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
HEARTFUL WISHES; IF POSSIBLE IMPLEMENT TO TET STUDENTS
ReplyDeletegood effort.congrats
ReplyDeleteGood effort..congrats
ReplyDeleteDear Padasalai,
ReplyDeleteKindly let me know will you giving IIT coaching ? if you give IIT Coaching please let me know my mail id mallaiashok@yahoo.co.in
நன்று ஐயா
ReplyDeletey do media always show girls??? is there no male candidate attending that coaching class? ? i think boys are humiliated..... please do change that pic
ReplyDeleteNice great job.keep it up.
ReplyDeleteNice great job.keep it up.
ReplyDelete