கேம்பிரிட்ஜ் நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியில் பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றிப் பயன்படுத்திவருவதாகத் தெரிவிக்கப்பட்டது. பயனர்களின் அழைப்பு விவரங்கள், குறுஞ்செய்திகள் ஆகியவை திருடப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் பல்வேறு பயனர்கள் அவர்களின் கணக்குகளை நீக்கம் செய்துவந்தனர். எனவே 10 நாட்களில் ஃபேஸ்புக் நிறுவனம் மாபெரும் சரிவை சந்தித்தது. தற்போது கேம்ப்ரிட்ஜ் நிறுவனம் மேலும் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
அதன்படி மொத்தமாக 87 கோடிப் பயனர்களின் தகவல்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதில் 5,62,000 இந்தியப் பயனர்களின் தகவல்களும் அடங்கும். பெரும்பாலும் அமெரிக்காவைச் சேர்ந்த பயனர்களின் தகவல்களே வெளியாகியுள்ளன. மொத்த தகவல்களில் அமெரிக்க பயனர்களின் தகவல்கள் 81 சதவிகிதம்.
இதனைக் கருத்தில் கொண்டு ஃபேஸ்புக் நிறுவனம் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லாத பட்சத்தில் தொடர்ச்சியாக ஃபேஸ்புக் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்லும் என்று கருதப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...