ஹைதராபாத்தில் சிறுவர்கள் வாகனம் ஓட்டியதற்காக 60 பெற்றோர்கள் சிறைக்குச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா தலைநகர் ஹைதராபாத்தில் சிறுவர்கள் வாகனம் ஓட்டியதற்காக கடந்த மார்ச் முதல் ஏப்ரல் 23 வரை 273 வழக்குகளைக் காவல்துறையினர் பதிவுசெய்துள்ளனர். இதில் 26 சிறுவர்களின் பெற்றோர்கள் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சுமார் 1 மாதகாலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது குறித்து போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் அனில் குமார் கூறும்போது, "சிறுவர்கள் வாகனங்கள் இயக்குவதால் சாலை விபத்துகள் அதிகரித்துவருவதையடுத்து வாரம் இரு முறை கண்காணிப்பில் ஈடுபட்டோம். இதுவரை இல்லாத அளவிற்கு நடப்பாண்டில், சுமார் 1079 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 13 மற்றும் 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மீதே அதிக வழக்குகள் பதிவாகி உள்ளன. இவற்றில் 60க்கும் மேற்பட்டோரின் பெற்றோர்கள் சிறைக்கு சென்றுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துக் காவல் துறையிடமிருந்து கிடைத்த தகவலின்படி, ஹைதராபாத் நகரத்தில் 18 வயதிற்குக் கீழ் வாகனம் ஓட்டும் சிறுவர்களின் எண்ணிக்கை 2016-2017 வரை 30 சதவீதம் உயர்ந்தது தெரியவந்துள்ளது. வாகனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடந்த 2017ஆம் ஆண்டு மட்டும் 14,608 வழக்குகளைக் காவல் துறையினர் பதிவுசெய்துள்ளனர். இது 2016ஆம் ஆண்டைக் காட்டிலும் 32 சதவிகிதம் அதிகமாகும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...