Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

4,000 அரசு ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தும் வேலை இல்லை!

அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால், 4,000 ஆசிரியர்களுக்கு, பாடம் நடத்தும் வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், கல்வித் தரம் மற்றும் கற்பித்தல் முறையில் குறைபாடுகள் உள்ளன.

அரசின் சார்பில், 27 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, ஆசிரியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் என, பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனாலும், அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை சரிந்து வருகிறது. இதற்கு, பல ஆசிரியர்கள், பள்ளிகளுக்கு செல்லாமல், 'ஓபி' அடிப்பதும், அலுவலக பணி என, ஊர் சுற்றுவதுமே காரணம்.இதுபோன்ற காரணங்களால், ஐந்து ஆண்டுகளில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால், மாணவர்களின் விகிதாச்சாரத்தை விட, ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனால், 4,000 ஆசிரியர்கள் பயிற்றுவிக்க, பள்ளிகளில் மாணவர்கள் இல்லாத நிலை உள்ளது.
இந்த பிரச்னையை அறிந்துள்ள கல்வித்துறை, அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சிக்கவில்லை. மாறாக, அந்த ஆசிரியர்களை, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள, காலியிடங்களில் அமர்த்த திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தால், மாணவர்கள் எண்ணிக்கை குறைந்த பள்ளிகள் மூடப்படுமோ என்ற அச்சம், பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, கல்வியாளர்கள் கூறியதாவது:அரசு பள்ளிகளில், கல்வித் தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை குறைய காரணமான, பள்ளி ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதை விடுத்து, ஆசிரியர்களை, வேறு பள்ளிகளுக்கு மாற்றுவதால், அந்த ஆசிரியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், அவர்கள் பணியாற்றிய பள்ளியில், புதிய மாணவர்கள் சேர மாட்டார்கள். அதனால், மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, பள்ளிகளை மூடும் அபாயம் ஏற்படும்.




7 Comments:

  1. தனியார் பள்ளிகலை அரசு ஊக்குவிக்கிறது.மேலும் 25% தனியார் பள்ளிகளில் மாணவர்கலைச் சேர்க்கிறது.அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி பெயரளவில் நடத்தப்படுகிறது.அதற்கென ஆசிரியர் நியமனம் இல்லை.இதனால் தான் மாணவர் எண்னிக்கை சரிகிறது.ஏராளமான தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதையும் நிறுத்த வேண்டும்.

    ReplyDelete
  2. தனியார் பள்ளிகலை அரசு ஊக்குவிக்கிறது.மேலும் 25% தனியார் பள்ளிகளில் மாணவர்கலைச் சேர்க்கிறது.அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி பெயரளவில் நடத்தப்படுகிறது.அதற்கென ஆசிரியர் நியமனம் இல்லை.இதனால் தான் மாணவர் எண்னிக்கை சரிகிறது.ஏராளமான தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதையும் நிறுத்த வேண்டும்.

    ReplyDelete
  3. Ozhunga paadam edutha yen matric pallikku poranga.... Oor kathai, vatti business,,. Union ,,, intha velaiyai paarkalannu sollunga..

    ReplyDelete
  4. Ozhunga paadam edutha yen matric pallikku poranga.... Oor kathai, vatti business,,. Union ,,, intha velaiyai paarkalannu sollunga..

    ReplyDelete
  5. Government give approval for private schools in every Street, in government school very poor infrastructure and moreover government gives bus pass to all students more than 10 km also then how students likes to come village school don't blame all the government school teachers in private school they give only coaching not teaching so before write an article please collect all the real details and then publish thank you

    ReplyDelete
  6. மாணவர் சேர்க்கை குறைவுக்கு ஆசிரியர்தான் காரணம் என்பது சுத்ந அபத்தம்... அரசுப் பள்ளி ஆசிரியர்கள் படும் கஷ்டம் என்ன எனபது அறிந்த பின் செய்தி வெளியிடவும்

    ReplyDelete
  7. Government teachers kulanthaikalai first Government school serka sollunga

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive