மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாளை
(ஏப். 17) கேபிள் டிவி ஒளிபரப்பை மாலை 3 மணி முதல் 6 மணி வரை நிறுத்த தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கம் முடிவு செய்துள்ளது.
கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்க மாவட்ட மாநாடு திண்டுக்கல்லில் நடைபெற்றது.சங்கத்தின் மாவட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.
தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்க மாநில பொதுச் செயலாளர் தாமோதரன் செய்தியாளர்களிடம் கூறும்போது “மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப். 17-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழகம் முழுவதும் மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 3 மணி நேரம் கேபிள் டிவி ஒளிபரப்பை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அன்றைய தினம், மதுரையில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...