தமிழக கூட்டுறவு சங்கத்தேர்தல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து
மனுக்கள் மீதும் ஏப்ரல் 20ம் தேதி தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா அமர்வில்
விசாரணை மேற்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல்
அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இந்த தேர்தலுக்கு முதல்வர், துணை முதல்வர் மாநில பொருப்பாளராகவும்,
அமைச்சர்கள் எம்எல்ஏக்கள், மாவட்ட பொறுப்பாளர்களாகவும் அறிவிக்கப்பட்டன.
இதில் 18,435 கூட்டுறவு சங்கங்களுக்கு 5 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்ட
இந்த தேர்தலில் ஆளும் அதிமுகவினர் அதிகாரத்தை பயன்படுத்தி தங்களுக்கு
வேண்டியவர்களை மட்டுமே தேர்ந்தெடுத்ததால் எதிர்க்கட்சியினரின் வேட்பு
மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இதனால் பல இடங்களில் வாக்குப்பதிவு
நடத்தாமலேயே சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்பட்டது.
மேலும் பல இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தேர்தல்கள்
காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இதில் முதல் இரு கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், தேர்தல் நடைமுறைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்கவும், 3, 4, மற்றும் 5 வது கட்ட தேர்தல்களை நடத்த தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவிற்கு எதிராக தமிழக கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவும், திமுக தரப்பில் கேவிட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்,”கூட்டுறவு சங்க தேர்தல் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தையும் வரும் வெள்ளிக்கிழமை அதாவது ஏப்ரல் 20ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா அமர்வில் விசாரணை மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...