சென்னை, மத்திய அரசின், 'நாக்' தரமதிப்பீடு இல்லாமல், 2020 வரை படிப்புகளை
நடத்த, அனுமதி கிடைத்து உள்ளதாக, தமிழ்நாடுதிறந்தநிலை பல்கலை
அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு பல்கலையின் பதிவாளர்,
கே.எம்.சுப்ரமணியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மரபார்ந்த பல்கலைகளுக்கு
மட்டுமே, தொலைநிலை படிப்பை நடத்த, நாக் தரமதிப்பீடு கட்டாயம்.ஆனால்,
திறந்தநிலை பல்கலை போன்றவற்றுக்கு, நாக் தரமதிப்பீடு, இன்னும் கட்டாயம்
ஆகவில்லை.எனவே, நாக் தரமதிப்பீடு இல்லாமல், 2020ம் ஆண்டு வரை, திறந்தநிலை
பல்கலையில், பட்டப்படிப்பு நடத்த, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., அனுமதி
அளித்துள்ளது.மேலும், நேரடி,'ரெகுலர்' கல்வி முறையில், பிஎச்.டி., -
எம்.பில்., ஆராய்ச்சி படிப்பை நடத்தவும், திறந்தநிலை பல்கலைக்கு,யு.ஜி.சி.,
அனுமதி வழங்கி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...