பீஹார் மாநிலத்தில், 2016ல் நடந்த, பிளஸ் 2
தேர்வில், முதல் மதிப்பெண் பெறுவதில் நடந்த ஊழலில் மூளையாக செயல்பட்டவரின்,
4.53 கோடி ரூபாய் சொத்துகளை, அமலாக்கத் துறை நேற்று முடக்கி வைத்தது.
முதலிடம் : பீஹாரில், முதல்வர், நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதாதளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், 2016ல் நடந்த, பிளஸ் 2 தேர்வில், கலை பிரிவில், வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்த, விஷுன் ராய் கல்லுாரி மாணவி, ரூபி ராய், மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். ஆனால், அவரால், நிருபர்களின் அடிப்படை கேள்விக்கு கூட பதில் அளிக்க முடியவில்லை. 'பொலிடிகல் சயின்ஸ்' என்ற பாடத்தை, 'பிராடிகல் சயின்ஸ்' என உச்சரித்த அப்பெண், அந்த பாடம், சமையல் கலை பற்றியது எனக் கூறியது, அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. பிளஸ் 2 தேர்வில் முறைகேடுகள் நடந்தது உறுதி யானதால், எஸ்.ஐ.டி., எனப்படும், சிறப்பு புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.விசாரணையில், விஷுன் ராய் கல்லுாரியின் செயலரும், முதல்வருமான, பச்சா ராய் என்பவர், மாணவ - மாணவியரின் விடைத்தாள்களில் தில்லு முல்லு செய்து அதிக மதிப்பெண் பெறச் செய்தது தெரியவந்தது.
முதலீடுகள் : இதற்கு, பி.எஸ்.இ.பி., எனப்படும், பீஹார் பள்ளி கல்வி வாரிய தலைவர், லால்கேஷ்வர் சிங் மற்றும் ஊழியர்கள் உதவியாக இருந்துள்ளனர்.
இந்த விசாரணைகளை தொடர்ந்து, பச்சா ராய்
மற்றும் அவர் குடும்பத்தினருக்கு சொந்தமான, 16 வீட்டு மனைகள், 10 வங்கி
கணக்குகளில் உள்ள, முதலீடுகள் ஆகியவற்றை, அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று
முடக்கி வைத்தனர். இவற்றின் மதிப்பு, 4.53 கோடி ரூபாய்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...