11
ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொது தேர்வு கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி
நடைபெற்று வருகின்றது ஏற்கனவே மொழி பாடமான தமிழ், ஆங்கிலம் முடிவடைந்த
நிலையில் கலைப் பிரிவு மாணவர்களுக்கான முதன்மை பாடமான வணிகவியல் மற்றும்
பொருளாதாரம் ஆகிய தேர்வுகளும் முடிவடைந்தன. இந்நிலையில் நேற்று 3-4-2018
கணக்குப் பதிவியல் தேர்வு நடைப்பெற்றது அதில் 1மற்றும் 3 மதிப்பெண்
வினாக்கள் எளிமையாகவும் நேர மேலாண்மையும் சரியாக இருந்ததாகவும் ஆனால் 2
மற்றும் 5 மதிப்பெண் வினாக்களில் அதிகமான நடவடிக்கைகள் கேட்கப்ப்ட்டதால்
போதிய நேரம் கிடைக்கவில்லை என்றும் அணைத்து வினாக்களுக்கும் விடை
தெரிந்திருந்தும் விடையளிக்க நேரம் கிடைக்கவில்லை என்றும் மாணவர்கள்
கூறினர். வினா அமைப்பு எளிமையாக இருந்தும் அணைத்து கேள்விகளுக்கும்
விடையளிக்க முடியவில்லை என்று ஆதங்கத்துடன் மாணவர்கள் கூறினர்.
இத்தேர்வு
பற்றி மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வணிகவியல் ஆசிரியர் பலவேச
கிருஷ்ணன் கூறுகையில் 11ம் வகுப்பு கலைப் பிரிவு மாணவர்களுக்கு வணிகவியல்
மற்றும் கணக்குப் பதிவியல் ஆகிய இரண்டு தேர்வு வினாக்களுமே மிகவும்
எளிமையாக இருந்தது. கணக்குப் பதிவியல் பாடத்தை பொருத்த வகையில் மாணவர்கள்
முன்கூட்டியே நேர மேலாண்மை பற்றி திட்டமிட்டிருந்தால் மாணவர்கள் எளிதாக
அணைத்து வினாக்களுக்கும் விடையளித்திருக்கலாம் என கூறினார்
pls upload the answer key for accountancy english medium
ReplyDelete