சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 10 ம் வகுப்பு விடைத்தாள்கள்
திருத்தும் பணிக்கு 10ம் வகுப்பிற்குபாடம் நடத்தாத பட்டதாரி
ஆசிரியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் மதிப்பெண்
குறைய வாய்ப்புள்ளதாக தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 10 ம் வகுப்பு மாணவர்களின்
விடைத்தாள்களை திருத்தும் பணி நாளை 24 ந் தேதி சிவகங்கை ஜஸ்டின் பள்ளியில்
நடக்க உள்ளது.விடைத்தாள்களை திருத்தும் பணிக்கு சிவகங்கை கல்வி
மாவட்டத்தில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.இதில் 10ம் வகுப்பிற்கு பாடம் நடத்தாத
ஆசிரியர்களுக்கும் அழைப்பு அனுப்பபட்டுள்ளது.தலைமை ஆசிரியர் ஒருவர்
கூறுகையில், 10ம் வகுப்பிற்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் மாணவர்கள் எழுதிய
கருத்தை உள்வாங்கி மதிப்பெண்களை வழங்குவர். ஆனால் பாடம் எடுக்காத
ஆசிரியர்கள் 'கீ ஆன்சர்களை' மட்டும் கொண்டு மதிப்பெண் வழங்குவதால்,
மாணவர்கள் உரிய பதிலை கருத்தோடு எழுதியிருந்தாலும் குறைவான மதிப்பெண்கள்
கிடைக்கவாய்ப்புள்ளது. ஆங்கிலத்திற்கு பணி மூப்பு அடிப்படையில் ஆங்கில
ஆசிரியர்கள் இல்லாமல் வேறு பாடங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் திருத்த
வாய்ப்புள்ளதால் மதிப்பெண் குறைய வாய்ப்புஉள்ளது, என்றார்.
பள்ளி கல்வி துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது: விடைத்தாள்களுக்கு
ஏற்பபட்டதாரி ஆசிரியர்களுக்கு அழைப்பு அனுப்பபட்டுள்ளது, பாடம் எடுக்காத
ஆசிரியர்கள் இருந்தால்திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும்
ஆங்கில பாடத்திற்கு ஆங்கில ஆசிரியர்களைகொண்டு திருத்தவும் நடவடிக்கை
எடுக்கப்பட்டுஉள்ளது, என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...