இன்று 10.04.2018 10ஆம் வகுப்பு கணித தேர்வு நடைபெற்றது .
இதில் 6ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு புதிய முறைகளில் கேள்வித்தாள்கள் வடிவமைக்கப்பட்டு இருந்தது .10ஆம் வகுப்பு வினாத்தாள் வடிவமைப்பு படி கேள்விகள் இடம் பெறவில்லை.முதல் கேள்வியே தயாரிக்கப்பட்ட வினா மாணவர்களை பயமுறுத்தும் விதத்தில் அமைந்தது .2012 ஆம் ஆண்டில் ஒரு மதிப்பெண் வினாக்கள் தயாரிக்கப்பட்ட வினாக்கள் (Creative ) இடம் பெற்றது. அதற்கு பிறகு மீதமுள்ள ஐந்து ஆண்டுகளில் இடம் பெறவில்லை ஆனால் இந்த ஆண்டு 6 வினாக்கள் (Creative) இடம் பெற்றுள்ளது .சில வினாக்கள் புத்தகத்தில் இருந்தாலும் ( option) மாற்றப்பட்டு உள்ளது .இரண்டு மதிப்பெண் வினாக்கள் பெரும்பாலும் பழைய வினாக்கள் இடம் பெறாமல் உள்ளது.3 வினாக்கள் தயாரிக்கப்பட்ட வினாக்கள் (creativity) வழக்கமாக இரண்டு வினாக்கள் மட்டும் கேட்கப்படும் .இந்த ஆண்டு மூன்று வினாக்கள் கேட்கப்பட்டு உள்ளது.ஐந்து மதிப்பெண்கள் வினாக்களை பொறுத்தவரை எதிர்பார்க்கப்பட்ட வினாக்கள் இல்லை.மற்றபடி எளிமையான வினாக்கள்.
ஒரு மதிப்பெண் வினாக்களில் 15 வினாக்களுக்கு 7 வினாக்கள் option A வில் உள்ளது .கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த வினாக்கள் சற்று கடினமே ,ஆனால் அனைத்து வினாக்களும் கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் . JEE, IIT தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது பாராட்ட தக்கது .ஆனால் அதற்கான கற்பித்தல் முறைகள் மற்றும் மாணவர்களின் மனநிலையை புரிந்து சிறிது சிறிதாக நடை முறை படுத்தினால் நல்லது .திடீர் என்று இது போன்ற வினாக்களை எந்த வித முன் அறிவிப்பும் இன்றி நடை முறைபடுத்தினால் சற்று சிரமமே ..இது போன்ற வினாக்கள் கண்டிப்பாக என் தமிழ் சமுதாயத்திற்கு வேண்டும் ஆனால் ஆண்டு தொடக்கத்தில் கேள்வித்தாள்கள் BLUE PRINT படி இடம் பெறாது என அறிவிப்பு செய்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.
Article by Mr. P. Viswanathan, Kallakurichi
Article by Mr. P. Viswanathan, Kallakurichi
நண்பர்களே SSLCதேர்வு....2018
ReplyDeleteதமிழ்..ஆங்கிலம்..
வரிசையில் கணிதம்...பாடமும்... creative question என்ற பெயரில் கிராமப்பற மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கியது..இந்த வருட பொதுத்தேர்வு... ஆங்கிலம் 1&2 இதில் ரொம்ப படு மோசம்.
K.BALAMURUGAN.TNJ.
This comment has been removed by the author.
ReplyDeletesame comment repeated..
Delete