ஒரே பணிக்கு ஒரே ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை டி.பி.ஐ.
வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 2012-ஆம்
ஆண்டுக்கும் முன்பும் பின்பும் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஊதிய
விகிதத்தில் முரண்பாடு இருப்பதாகவும், அதனை உடனடியாக களைய வலியுறுத்தியும்
சென்னை டிபிஐ வளாகத்தை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள்
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டன.
இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆசிரியர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் போராடிய 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
ஆசிரியர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ராஜரத்தின ஸ்டேடியத்தில் கொண்டு போய்
வைக்கப்பட்டனர். ஆனால் ஆசிரியர்கள் அங்கும் தங்களது கொள்கைகளை வலியுறுத்தி
காலை 6 மணி முதல் உண்ணாவிரத போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். விடிய விடிய
ஆசிரியர்கள் நடத்திய வரும் இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் பல
அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
நேரம் செல்ல செல்ல ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அங்கு அதிகரித்து வருகிறது.
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பள்ளிக்கல்வித்துறை தரப்பில் முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே 2 நாட்களாக ஆசிரியர்கள் பட்டினி
போராட்டம் காரணமாக, ஒருவருவராக மயங்கி விழுந்து வருகின்றனர்.
கிட்டத்தட்ட 19-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்து மயங்கி விழுந்ததால்
அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 108 ஆம்புலன்ஸ்
வரவழைக்கப்பட்டு மயங்கிவிழுந்தவர்கள் அனைவரும் உடனடியாக ராஜீவ்காந்தி
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...