புதிய, 100 ரூபாய் நோட்டை விரைவில் வெளியிட, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
'பழைய, 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, அறிவிக்கப்பட்ட பின்,
ரிசர்வ் வங்கி, புதிய, 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில்
விட்டது. இந்நிலையில், தற்போது புழக்கத்தில் உள்ள, பழைய ரூபாய்
நோட்டுகளுடன், புதிய, 100 ரூபாய் நோட்டுகளை வெளியிடும் நடவடிக்கையில்,
ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ளது.
பழைய, 100 ரூபாய் நோட்டை விட, புதிய, 100 ரூபாய் நோட்டின் நீளம் மற்றும்
அகலம் குறைவாகவும், 20 சதவீதம் எடை குறைவாகவும் இருக்கும். வரும், மே
மாதத்திற்குள், புதிய, 100 ரூபாய் நோட்டு அச்சிடப்படும் பணி முடிந்து, ஜூன்
மாதம் முதல், புழக்கத்துக்கு வரும் என, ரிசர்வ் வங்கி வட்டாரங்கள்
தெரிவித்தன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...