மேஷம்
குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். சகோதர வகையில்
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
வாகனப் பழுதை சரி செய்வீர்கள்.
வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிராத்தனைகளை
நிறைவேற்றுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மாலை 6.55 மணி முதல்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் அதிகம் உழைக்க வேண்டி வரும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
ரிஷபம்
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை
எடுப்பீர்கள். பிள்ளைகள் ஒத்துழைப்பார்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்துக்
கொள்வார்கள். முகப் பொலிவு கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சகோதர
வகையில் நன்மை கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புதிய
சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் இழந்த சலுகைகள் மீண்டும்
பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
மிதுனம்
வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக்
காட்டுவீர்கள்.உத்யோகத்தில் மகிழ்ச்சி கிட்டும்.தாயாரின் உடல் நிலை
சீராகும்.கணவன் -மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும்.வெளியூர் பயணங்களால்
ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர்செய்வீர்கள். அரசாங்க காரியங்களில் அனுகூலமான
நிலைக் காணப்படும். உத்யோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
கடகம்
மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டுமென
நினைப்பீர்கள்.குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்.பிள்ளைகள் பொறுப்பாக
நடந்துக் கொள்வார்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள்.உத்யோகத்தில்
மதிக்கப்படுவீர்கள்.சக ஊழியர்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர
வகையில் உதவிகள் கிடைக்கும். பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
சிம்மம்
சகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் கல்யாண முயற்சிகள்
பலிதமாகும். உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தை சீர்
செய்வீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மூத்த
அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை
நிறைவேற்றுவீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
கன்னி
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். குடும்பத்தில் உங்கள்
வார்த்தைக்கு மதிப்பு கூடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.
தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய
சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். உயரதிகாரி
ஆதரிப்பார். நட்பு வட்டம் விரியும். தாழ்வு மனப்பான்மை நீங்கும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
துலாம்
மாலை 6.55 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நாளில்
முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில்
முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும்.
விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக்
கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
விருச்சிகம்
கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். அநாவசியச் செலவுகளை
குறைக்கப்பாருங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சகோதர
வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு
லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். மாலை
6.55 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் முன்யோசனையுடன்
செயல்படப்பாருங்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
தனுசு
பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள். உறவினர்களின் அன்புத்
தொல்லைகள் விலகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். எதிர்பாராத
பணவரவு உண்டு. வழக்குகள் சாதகமாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு.
உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
மகரம்
குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்
கொள்வார்கள். சகோதர வகையில் நன்மை கிட்டும். நவீன மின்னலை சாதனங்கள்
வாங்குவீர்கள். பழைய கடன் தீரும். வெளிவட்டாரத்தில் கௌரவம் கிட்டும்.
வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில்
எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
கும்பம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். பிள்ளைகளின் தேவைகளை
பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.
உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வியாபார ரீதியாக பிரபலங்களை
சந்திப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
மீனம்
மாலை 6.55 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கலான, சவாலான
காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். வீட்டிலும்,
வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிலரின் தவறுகளை சுட்டிக்
காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள்
தள்ளிப் போகும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...