மேஷம்
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால்
ஆதாயம் உண்டு.
பழைய சொந்த&பந்தங்கள் தேடி வந்துப் பேசுவார்கள். புது
வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள்.
உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள்.
அதிஷ்ட எண்:8
அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு,பச்சை
ரிஷபம்
கணவன்&மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தோற்றப் பொலிவுக் கூடும்.
விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள்
விரும்பி வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு.
உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்:3
அதிஷ்ட நிறங்கள்:மெரூண்,ப்ரவுன்
மிதுனம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள்
வந்துப் போகும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக்
கொள்வார்கள். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். அடுத்தவர்களை குறைக்
கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில்
இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது
அலட்சியம் வேண்டாம்.
அதிஷ்ட எண்:6
அதிஷ்ட நிறங்கள்:மெரூண்,ஆரஞ்சு
கடகம்
எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள்
வந்து நீங்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். திடீர் பயணம்
உண்டு. வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் புது முதலீடு
செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது
நல்லது.
அதிஷ்ட எண்:5
அதிஷ்ட நிறங்கள்:கிரே,மஞ்சள்
சிம்மம்
தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின்
ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்
கொடுப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள்.
உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்.
அதிஷ்ட எண்:9
அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு,ஊதா
கன்னி
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப்
பேசுவார்கள். நம்பிக்கைக்குரியவர்களை கலந்தாலோசித்து சில முடிவுகள்
எடுப்பீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு
கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.
அதிஷ்ட எண்:4
அதிஷ்ட நிறங்கள்:மஞ்சள்,கருநீலம்
துலாம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கேட்ட இடத்தில் உதவிகள்
கிடைக்கும். முன்கோபம் குறையும். வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென
நினைப்பீர்கள். சகோதரங்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். தொழில்,
உத்யோகத்தில் திருப்தி உண்டாகும்.
அதிஷ்ட எண்:1
அதிஷ்ட நிறங்கள்:ரோஸ்,கிரே
விருச்சிகம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு,
தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். மற்றவர்களை
நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை
பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்
கொள்ள வேண்டாம்.
அதிஷ்ட எண்:7
அதிஷ்ட நிறங்கள்:வெள்ளை,மஞ்சள்
தனுசு
மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளின் தேவைகளைப்
பூர்த்தி செய்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும்.
மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வேற்றுமதத்தவர் அறமுகமாவார். வியாபாரத்தில்
பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.
அதிஷ்ட எண்:3
அதிஷ்ட நிறங்கள்:வைலெட்,இளஞ்சிவப்பு
மகரம்
கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம்
உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். அதிகாரப் பதவியில்
இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன்
ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு
கிடைக்கும்.
அதிஷ்ட எண்:2
அதிஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை,ப்ரவுன்
கும்பம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில்
நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க
தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்துப் பேசுவார்கள்.
அதிஷ்ட எண்:7
அதிஷ்ட நிறங்கள்:மஞ்சள்,பிங்க்
மீனம்
தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். நட்பு வட்டம் விரியும். தாய்வழி
உறவினர்களுடன் வீண் டென்ஷன் வந்துப் போகும். புது வேலை அமையும். வர வேண்டிய
பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள்
ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.
அதிஷ்ட எண்:1
அதிஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே,ப்ரவுன்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...