மேஷம்
உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக
இருப்பார்கள்.
அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். மனதிற்கு
இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை
அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
அதிஷ்ட எண்:1
அதிஷ்ட நிறங்கள்:மஞ்சள்,வெளீர்நீலம்
ரிஷபம்
கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த வந்த கூச்சல், குழப்பம்
விலகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன
காரியங்கள் முடியும். வியாபாரம், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும்.
அதிஷ்ட எண்:7
அதிஷ்ட நிறங்கள்:மிண்ட்கிரே,வைலெட்
மிதுனம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனஉளைச்சல் ஏற்படும். கணவன்&
மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். யாரை நம்புவது என்கிற
மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். உங்கள் வாயை சிலர் கிளறி வேடிக்கைப்
பார்ப்பார்கள். அதிகம் பேச வேண்டாம். வியாபாரத்தில் மறைமுகப் பிரச்னைகள்
வரக்கூடும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.
அதிஷ்ட எண்:9
அதிஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை,நீலம்
கடகம்
பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. அண்டை, அயலார்
சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வெளிவட்டாரத்தில்
அலைச்சல் அதிகரிக்கும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளை
சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள்.
அதிஷ்ட எண்:5
அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு,கிரே
சிம்மம்
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். சகோதர வகையில்
பயனடைவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள்.
உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரம்
செழிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள்.
அதிஷ்ட எண்:8
அதிஷ்ட நிறங்கள்:ரோஸ்,கிளிப் பச்சை
கன்னி
உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக்
கொள்வீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிலர்
உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் லாபம்
வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
அதிஷ்ட எண்:6
அதிஷ்ட நிறங்கள்:வெளிர் மஞ்சள்,ப்ரவுன்
துலாம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு, களைப்பு நீங்கி
உற்சாகமடைவீர்கள். கணவன்&மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள்.
பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில்
நிம்மதி உண்டு.
அதிஷ்ட எண்:4
அதிஷ்ட நிறங்கள்:ஆலிவ் பச்சை,வெள்ளை
விருச்சிகம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும்.
குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.
நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக்
கொள்வார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.
உத்யோகத்தில் சக ஊழியர்களைக் குறைக் கூற வேண்டாம்.
அதிஷ்ட எண்:3
அதிஷ்ட நிறங்கள்:அடர் சிவப்பு,இளம்மஞ்சள்
தனுசு
உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர
வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். தாயார் ஆதரித்துப்
பேசுவார். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை
கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிஷ்ட
எண்:1
அதிஷ்ட நிறங்கள்:ஊதா,ரோஸ்
மகரம்
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு
களைக்கட்டும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள்.
பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன்
செயல்படுவார்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும்.
அதிஷ்ட எண்:2
அதிஷ்ட நிறங்கள்:ப்ரவுன்,கிரே
கும்பம்
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று
முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள்.
பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில்
கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்:4
அதிஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை,ஆரஞ்சு
மீனம்
எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை
முடியும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித்
தருவீர்கள். தாயாருடன் மோதல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து
லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
அதிஷ்ட எண்:6
அதிஷ்ட நிறங்கள்:வெள்ளை,நீலம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...