'குரூப்
- 3 ஏ பிரிவில் அடங்கிய பண்டக பொறுப்பாளர் பதவிக்கு, 26, 27ல், சான்றிதழ்
சரிபார்ப்பு நடக்கும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது. தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார்,
வெளியிட்ட செய்திக்குறிப்பு:'குரூப் - 3 ஏ' பிரிவில் அடங்கிய, பண்டக
பொறுப்பாளர் பதவிக்கு, நேரடி நியமனம் செய்ய, டி.என்.பி.எஸ்.சி., சார்பில்,
2013 ஆக., 3ல் எழுத்து தேர்வு நடந்தது.
இதற்கான முடிவுகள், 14ல் வெளியிடப்பட்டன. பண்டக பொறுப்பாளர் பதவியில், 20 காலியிடங்களை நிரப்ப, வரும், 26, 27ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். இதற்கான அழைப்பு கடிதம் பெற்றவர்கள், அதில் குறிப்பிட்ட நேரத்தில், தவறாமல் பங்கேற்க வேண்டும். இந்த சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, 1:5 என்ற விகிதத்தில், தேர்வர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...