கரூர்
மாவட்டம் , கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், ஊ.ஒ.தொ.பள்ளி கொமட்டேரி- ல்
நேற்று (26-03-2018) மெய்நிகர் வகுப்பறை (smart class) தொடக்க விழா
நடைபெற்றது .. விழாவிற்கு உயர்திரு.கூடுதல் உதவி தொடக்ககல்வி அலுவலர்
திருமதி.குமுதா அவர்கள் தலைமையேற்று திறந்துவைத்தார்.
மேலும்
இம்முயற்சிக்கு பாராட்டு தெரிவித்த அலுவலர் அவர்கள் இதன்மூலம்
அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் மேம்படும் எனவும், பள்ளியின் சேர்க்கை
விகித்த்தை அதிகரிக்க முடியும் எனவும் கூறினார். விழாவில் வட்டார வளமைய
ஆசிரிய பயிற்றுனர் திரு.ரவிக்குமார் அவர்கள் பங்கேற்று சிறப்பித்தார்..
பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி.ஜெனதா அவர்கள் அனைவரையும் வரவேற்றார்
..இந்த மெய்நிகர் வகுப்பறையானது ரூ1,50,000 மதிப்பி்ல் அருகில் உள்ள
Walwhan Renewable Energy Ltd நிறுவனத்தின் மூலம் அன்பளிப்பாக
வழங்கப்பட்டதாகும். விழாவிற்கு Walwhan Renewable Energy Ltd நிறுவனத்தின்
தலைமை செயல் அதிகாரி (CEO), கல்வியாளர்கள் , பெற்றோர்கள் மற்றும் ஊர்
பொதுமக்கள் திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.. உதவி ஆசிரியர்
திரு.உ.பழனிசாமி அவர்கள் மெய்நிகர் வகுப்பறையினை அன்பளிப்பாக அளித்த சோலார்
நிறுவனத்தார்க்கும் , திறந்து வைத்த கூ.உ.தொ.க.அலுவலர் அவர்களுக்கும்
மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார்
Thank u
ReplyDelete